தடுப்பூசியை வீணாக்கியத்தில் இந்த மாநிலம் தான் முதலிடம்..!
- IndiaGlitz, [Tuesday,April 20 2021]
கொரோனா தடுப்பூசியை வீணாக்கிய மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது.
உலகளவில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தினசரி பாதிப்பு என்பது 2 லட்சமாக இருந்து வருகிறது. இந்திய அளவில் கொரோனா பாதித்த மாநிலங்களில், தமிழகம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும், தீவிர நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை எடுத்து வருகின்றன.மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வந்தாலும், பல்வேறு இடங்களில் தடுப்பு மருந்து கிடைப்பது என்பது தட்டுப்பாடாக உள்ளது.
படுக்கைகள், கொரோனா தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு சார்பாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது,
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிகம் கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியது தமிழகம் தானாம். தமிழகத்தில் இதுவரை 10 கோடி , கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில் அதில் 44 லட்சம் தடுப்பூசிகள் வீணாகியுள்ளதாக, தகவல்கள் கூறுகின்றது. அதவாது தமிழகத்தில் 12.10%,ஹரியானா -9.74%; பஞ்சாப் -8.12%; மணிப்பூர் 7.8% ; தெலுங்கானா 7.55% என கொரோனா தடுப்பூசிகள் வீணாகியுள்ளதாம்.
கொரோனா தடுப்பூசியை வீணாக்காத மாநிலங்களில் கேரளா தான் முதலிடத்தை பிடித்துள்ளது. அதே போல் மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம், மிசோரம், கோவா, டாமன் டையூ, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவுகள் உள்ளிட்ட மாநிலங்களிலும் தடுப்பூசிகள் வீணாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.