close
Choose your channels

தளபதி 67: சமந்தா வில்லி என்றால் இவர் தான் விஜய்க்கு ஜோடியா?

Tuesday, July 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 67 வது படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் கசிந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தளபதி 67’ படத்தில் சமந்தா முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்தாலும் அவர் நெகட்டிவ் கேரக்டரில் வில்லியாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

சமந்தாவின் கேரக்டர் வில்லி என்றால் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிப்பது யார் என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ள நிலையில் தற்போது இதுகுறித்து செய்தியும் கசிந்துள்ளது.

’தளபதி 67’ படத்தில் நாயகியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’, ’டான்’ மற்றும் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களில் நடித்த பிரியங்காவுக்கு விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment