இப்ப சூழல் சரியில்லை.. அப்புறம் பாத்துகலாமா??? டிவிஸ்ட்டு அடிக்கும் அமெரிக்க அதிபர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சில மாதங்களுக்கு முன்பே அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகி விட்டது. இத்தேர்தலில் இரண்டாவது முறையாக தற்போதைய அதிபர் டெனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். இவர் குடியரசு கட்சியை சார்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே காரசாரமாக வாய்ச் சண்டைகள், வாக்குவாதங்கள் என இப்போதே அமெரிக்க அரசியல் களைக்கட்டத் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் அரிசோணா, பிஃளோரிடா, மிச்சிகன், வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான் சின் போன்ற மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் ட்ரம்ப் பின்னடைவு பெற்றிருப்பதாக கூறுப்படுகிறது. மேலும் கருத்துக்கணிப்பில் பல வாரங்களாக தொடர்ந்து ஜோ பிடன் மட்டுமே முன்னிலை வகித்து வருவதாகவும் கூறப்படுகிறது. நிலைமை இப்படியிருக்கும்போது அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பரிந்துரையை வைத்திருக்கிறார். அதாவது கொரோனா பரவல் தொற்று இருக்கும் சமயத்தில் அமெரிக்க மக்கள் பாதுகாப்பாக தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். அதற்கான நேரம் வரும்வரை காத்திருப்போம் என்பது போன்ற வேண்டுகோளை வைத்திருக்கிறார்.
மேலும் கொரோனா நேரத்தில் மக்களின் பாதுகாப்பு முக்கியம், தபால் ஒட்டு முறையில் பல குறைபாடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் அது மிகவும் சிரமமான காரியமாகப் படுகிறது. ஒருவேளை அமெரிக்க அதிபரின் தேர்தலில் குளறுபடிகள் நடந்தால் அது அமெரிக்காவிற்கு பெருத்த அவமானமாக மாறிவிடும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அதிபரின் இந்தப் பரிந்துரையைத் தற்போது ஊடகங்கள் வேறுவிதமாக சித்தரிக்கவும் ஆரம்பித்து விட்டன. மேலும் மக்கள் மத்தியில் அதிபரின் செல்வாக்கு குறையத் தொடங்கிவிட்டது. இதனால் அதிபர் தேர்தலை தள்ளிப்போட பார்க்கிறார் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments