அஜித்தின் 'துணிவு' படத்தில் இதுதான் ஹைலைட்.. கசிந்த ஆச்சரியமான தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகிய ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஹைலைட் காட்சி குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
‘துணிவு’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ’சார்பாட்டா பரம்பரை’ நடிகர் ஜான் கொகைன் அஜித்துடன் மோதும் காட்சி தான் இந்த படத்தின் ஹைலைட் என்றும் இருவரும் மோதும் இந்த காட்சி தமிழ் திரையுலகிற்கு புதுமையானதாக இருக்கும் என்றும் இந்த காட்சியை பார்க்கும் ரசிகர்கள் வேறு விதமான அனுபவத்தை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரகனி, வீரா, அஜய், சிபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் வங்கி கொள்ளை குறித்த கதையம்சம் கொண்டது என்றும், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படம், அஜித்தின் மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Dubbing for the first time in Tamil for #thunivu .
— Highonkokken (@johnkokken1) November 22, 2022
So happy and blessed to have dubbed for my character in an Ajith Kumar Sir's film, couldn’t have asked for anything better.#thunivupongal2023 #THUNIVURageForPongal#thunivuupdate#thunivupongal pic.twitter.com/LX6DtfjgGQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments