காதலுக்கு பாலினம் தெரியாது… வரலாற்றை மாற்றிய ஓரினச்சேர்க்கை ஜோடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
காதலுக்கு பாலினம் தேவையே இல்லை, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக இணைந்து இந்தச் சமூகத்தில் வாழ உரிமையுண்டு என்பதைப் பறைசாற்றும் விதமாக இந்தியாவில் ஒரு ஜோடி வரலாற்றில் கால்தடம் பதித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பெண் மருத்துவர்கள் பரோமிதா முகர்ஜி மற்றும் டாக்டர் சுர்பி மித்ரா. இருவரும் ஒருபாலின விரும்பிகள். அதோடு இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கவும் துவங்கியுள்ளனர். இதனால் வெளிப்படையாக திருமணம் செய்துகொண்டு வாழ்வது என முடிவெடுத்து தங்களுடைய முடிவை தற்போது அறிவித்து இருக்கின்றனர்.
இந்தியச் சட்டப்படி ஒரு பாலினச் சேர்க்கையாளர் இருவர் திருமணம் செய்துகொண்டு வாழ்வதற்கு உரிமையுண்டு என்றாலும் சமூகத்தில் இன்றைக்கும் இதுபோன்ற ஜோடிகளை அநாகரிகமாகப் பார்க்கும் மனோபாவம் இருந்து வருகிறது. மேலும் பெற்றோர்கள் இத்தகைய திருமணத்தைப் பெரும்பாலும் விரும்புவதே இல்லை. இத்தகைய தடைகளை உடைத்து இந்த ஜோடி தற்போது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கோவாவில் இந்த ஜோடிகளின் திருமணம் இந்த மாதம் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியில் மோதிரம் மாற்றிக்கொண்டு இந்த ஜோடி தங்களது அன்பை பரிமாறிக்கொள்ளத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தங்களது திருமணம் குறித்துப் பேசிய டாக்டர் பரோமிதா இது வாழ்நாள் அர்ப்பணிப்பு. நாங்கள் இரண்டு மனைவிகள். கணவன் தேவையில்லை, ஒரு குழந்தையைத் தத்தெடுத்து தாயாக வேண்டும் எனக் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout