இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது... நள்ளிரவில் அறிவிப்பு வெளியிட்ட சீனாவின் புது தந்திரம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மே மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பித்த எல்லைப் பிரச்சனை இன்னும் முடிவுக்குவராத நிலையில் 20 இந்திய இராணுவ வீரர்களையும் நாம் இழந்து இருக்கிறோம். இந்நிலையில் கல்வான் பகுதி எங்களுக்குச் சொந்தமானது என சீனா அறிவிப்பு வெளியிட்டு இருப்பதும் கடும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கல்வான் பகுதியில் நடைபெற்ற அசம்பாவிதத்திற்கு முடிவு காணும் விதமாக இருநாட்டு உயர்மட்ட அதிகாரிகளும் பேச்சுவார்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் தற்போது மேலும் பதட்டமான ஒரு சூழலை சீனா உருவாக்கி இருக்கிறது.
நேற்று நள்ளிரவில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் கல்வான் பகுதி முழுவதும் சீனாவிற்கு சொந்தமானது. சீனாவிற்கு சொந்தமான இடத்தில் இந்திய இராணுவம் புகுந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால்தான் ஜேன் 15 ஆம் தேதி கைகலப்பில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்படுத்தி விட்டது. இந்தியா கல்வான் பகுதியில் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலைமையில் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம் எனவும் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
கடந்த ஜுன் மாதம் 6 ஆம் தேதி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கல்வான் பகுதி எங்களுக்கு சொந்தமானது என சீனா வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த கோரிக்கைக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. இந்நிலையில் கடந்த மே 22 ஆம் தேதிக்கு முன்னர் இந்திய துருப்புகள் கல்வான் பகுதியில் சாலை கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டதாகவும் அந்தக் கட்டமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சீனா தனது துருப்புகளை குவித்ததாகவும் கூறப்படுகிறது. இதைப் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத்தான் ஜுன் 6 ஆம் தேதி இருநாடுகளும் பேசித் தீர்த்துக் கொண்டன. அதன்படி இருநாட்டு இராணுவ வீரர்களும் அந்தப் பகுதியில் இருந்து விலகிக்கொள்ள ஒப்புதல் மேற்கொள்ளப் பட்டது.
இந்நிலையில் ஜுன் 15 ஆம் தேதி இந்திய இராணுவ வீரர்கள் கல்வான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்றும் அங்குள்ள சீன கூடாரங்களை காலி செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில் இருநாட்டு இராணுவ வீரர்களும் கைகலப்பில் ஈடுபட்டு இருக்கின்றனர். சண்டையில் 20 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 35 சீன இராணுவ வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவிக்கிறது. இதுகுறித்து சீனாவின் தரப்பில் எந்தச் செய்தியும் உறுதிப்படுத்தப் படவில்லை.
கல்வான் தாக்குதல் குறித்து முதலில் பேச்சுவார்த்தை தொடங்கியபோது முதற்கட்டமாக எந்த இறுதிய முடிவு எடுக்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜுன் 17 ஆம் தேதி அன்று நடத்திய பேச்சு வார்த்தையில் ஜுன் 6 ஆம் தேதி போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத்தான் இந்திய உயர் அதிகாரிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். அதற்கு பின்பே சீனா பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஜுன் 6 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கல்வான் பகுதி குறித்து சீனா முன்பே வலியுறுத்தி இருந்ததகாவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சீனா நேற்று நள்ளிரவில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் பல ஆண்டுகளாகவே சீன இராணுவம் கல்வான் பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. அது எங்களுக்குச் சொந்தமான பகுதி. இந்திய தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிககைகளில் ஈடுபடக்கூடாது எனவும் கூறியிருக்கிறது. அதோடு இந்திய வீரர்கள் ஆற்றைக் கடந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com