பிறப்புறுப்பில் 278 ஓட்டை… பதற வைக்கும் கின்னஸ் சாதனை மனிதன்!
- IndiaGlitz, [Wednesday,December 22 2021]
உடலில் துளைகள்போட்டு அதில் ஆபரணம் அணிந்து கொண்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஒரு மனிதன் தன்னுடைய அந்தரங்க உறுப்பிலும் 278 துளைகளை போட்டுள்ள ரகசியத்தை சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். இதனால் தனது அந்தரங்க வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என அவர் கூறியிருக்கும் தகவல்தான் தற்போது உலகம் முழுவதும் பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெர்மனியைச் சேர்ந்த 61 வயதான நபர் ரோல்ஃப் பச்சோல்ஸ். இவர் 40 வயதில் இருந்தபோது தன்னுடைய உடலில் மாற்றங்களை செய்துகொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். இதற்காக 90% உடல் முழுவதும் பச்சைக்குத்திக் கொண்டுள்ளார். மேலும் உடலில் ஆங்காங்கே துளைகளிட்டு அதில் உலோகத்தாலான ஆபரணங்களை அணியத் துவங்கியிருக்கிறார்.
அந்த வகையில் உதட்டில் மட்டும் 94 ஓட்டைகளைப் போட்டு அதில் உலோகத்தால் ஆன ஆபரங்கணை அணிந்துள்ளார். மேலும் கண், புருவம் என உடலில் ஆங்காங்கே இப்படி துளைகளிட்டு ஆபரணங்களை அணிந்துள்ளார். மேலும் தனது ஆணுறுப்பில் அவர் 278 ஓட்டைகளைப் போட்டுள்ளதாகவும் ரோல்ஃப் தற்போது தெரிவித்துள்ளார்.
இதனால் தன்னுடைய அந்தரங்க வாழ்க்கைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. என்னுடைய உடலில் இருக்கும் மாற்றங்கள் அனைத்தும் வெளியில் மட்டும்தான். இது எந்த விதத்திலும் என்னுடைய பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை என்று ரோல்ஃப் கூறியிருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஆணுறுப்பில் சிறு காயம் ஏற்பட்டாலே அலறித் துடிக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் இவர் செய்திருக்கும் இந்தக் காரியம் கடும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் உடல் முழுவதும் பச்சைக்குத்திக் கொண்டு உடலில் கிடைக்கிற இடங்களில் எல்லாம் துளையிட்டு ஆபரணங்களை அணிந்துள்ள ரோல்ஃப் ஒரு டெலிகாம் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த விசித்திர செயலுக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள ரோல்ஃப் தனது செயலுக்காக மிகுந்த மகிழ்ச்சியை அனுபவித்து வந்தாலும் ஒருசில சமயங்களில் சங்கடங்களையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
அதிலும் குறிப்பாக ஒருமுறை ரஷ்ய விமான நிலையத்தில் ரோல்ஃப்பை சோதனையிட்ட அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி நீங்கள் ஒரு ஜென்டில்மேன். ஆனால் பார்ப்பதற்கு சூனியம் வைக்கும் சூனியக்காரர்கள் போலவே இருக்கிறீர்கள் என்று சொன்னார்களாம். விசித்திரங்களில் சுகம் காணும் இந்த மனிதனை நினைத்து பலரும் ஆச்சர்யப்படத்தான் செய்கின்றனர்.