காதலர் தினத்தை முன்னிட்டு விவாகரத்து இலவசம்? இப்படி ஒரு ஆஃபரா!

  • IndiaGlitz, [Saturday,February 06 2021]

மாதக் கணக்கில் காதலர் தினத்திற்காக காத்திருந்து காதலை சொல்லும் இளசுகளுக்கு மத்தியில் காதலர் தினத்தை முன்னிட்டு விவாகரத்து இலவசமாகப் பெற்றுத் தரப்படும் என்றொரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பை பார்த்து பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் இயங்கிவரும் சட்ட ஆலோசனை மையம் ஒன்று காதலர் தினத்தை முன்னிட்டு விவாகரத்து பெற விரும்பும் தம்பதிகளுக்கு இலவசமாகப் பெற்றுத் தருகிறோம் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதற்காக விவகாரத்துப் பெற இருக்கும் தம்பதிகள் இமெயிலில் தங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும். அந்த விவரங்களை ஆராய்ந்த பின்னர் நீதிமன்றம் வாயிலாக இலவசமாக விவகாரத்துப் பெற்றுத் தரப்படும்.

மேலும் இந்த ஆஃபரை முன்னிட்டு நீதிமன்றத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தைக்கூட சட்ட ஆலோசனை மையமே செலுத்தி விடும். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள சிலர், வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய நாளில் இப்படி ஒரு ஆஃபரை வெளியிடுவார்களா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னொரு பக்கம் இதுதாண்டா நல்ல சமயம் என்று விவகாரத்துக்கு விண்ணப்பித்து வருவோரும் வரிசை கட்டி நிற்கத் தொடங்கி விட்டனர்.