மும்பையில் வீடு வாங்கக்கூடாது… நடிகர் தனுஷ்க்கு அன்பு கட்டளை விடுத்த பிரபல இயக்குநர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் தனுஷை “மும்பையில் வீடு வாங்க நான் ஒருபோதும் அனுமதிப்பது இல்லை“ என்று பிரபல பாலிவுட் இயக்குநர் ஆன்ந்த் எல் ராய் அளித்த பேட்டி கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் தனுஷ் பாலிவுட் சினிமாவில் நடித்து அங்கும் தனிக்கவனம் பெற்றிருக்கிறார். தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் கலக்கி வருகிறார். இவர் நடித்து வரும் “தி கிரேட் மேன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆன்ந்த் எல் ராய் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷை குறித்து நெகிழ்ச்சியோடு சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான “ராஞ்சனா“ எனும் இந்தி திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து இருந்தார். இதன் மூலம் இந்தி ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பையும் பெற்றிருந்தார். வரும் ஜுன் 21 ஆம் தேதியோடு இந்தப் படம் 8 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறது. ராஞ்சனாவைத் தவிர ஆன்ந்த் எல் ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது “அத்ங்கி ரே“ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
வரும் ஆக்ஸ்ட் 6 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியிடப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் நடிகர் தனுஷ் ஹாலிவுட் திரைப்படத்தில் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் ஆன்ந்த் எல் ராய் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் குறித்து சில நெகிழ்ச்சியான கருத்துகளை கூறியிருக்கிறார்.
அதில் “ ராஞ்சனா படத்தின் கதையை சொன்ன உடனேயே நான் இதில் நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டார். அந்தப் படம் பெரும் வெற்றிப் பெற்றது. சினிமாகாரர்கள் பெரும்பாலும் சுயநலமாக இருப்பதாகக் கூறப்படுவது உண்டு. ஆனால் நான் அப்படி இல்லை. நடிகர் தனுஷ் எனக்கு தம்பி போன்றவர். அதனால்தான் அவரை நான் மும்பையில் வீடு வாங்க அனுமதிப்பதே இல்லை. அவர் எப்போது மும்பைக்கு வந்தாலும் என்னுடைய வீட்டில்தான் தங்க வேண்டும் என நெகிழ்ச்சியோடு பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் “ஜகமே தந்திரம்” திரைப்படம் வரும் ஜுன் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் “தி கிரேன் மேன்” படம் நிறைவு பெற்றதாகவும் கூறப்படுகிறது. கூடவே இந்தியில் “அத்தங்கி ரே” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com