மருத்துவமனையில் இருந்தபோதிலும் தேசப்பற்றை விடாத சீக்கியர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களில் ஒருவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கியர் முன்னாள் ராணுவ வீரர் சர்தார் லாப்சிங் என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 1960ஆம் ஆண்டில் இருந்து இவர் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் தேசிய கொடியேற்றி அந்த தேசிய கொடிக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்து வருகிறார். ஆனால் இந்த வருட சுதந்திர தினத்தில் இவர் மருத்துவமனையில் இருந்ததால் கொடியேற்றி தேசியகொடிக்கு மரியாதை செலுத்த முடியாத நிலை இருந்தது.
இதனால் மிகுந்த மன வருத்தத்தில் சர்தார் லாப்சிங் இருந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு ஒரு தேசிய கொண்டு வந்து அவர் முன் வைத்தனர். மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபோதிலும் தனது தேசப்பற்றை நிரூபிக்கும் வகையில் படுத்துக்கொண்டே தேசிய கொடிக்கு சல்யூட் அடித்தார் சர்தார்.
மேலும் இவரது ஒரே மகன் போரில் வீரமரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் போன்று தேசப்பற்றுமிக்கவர்கள் இருக்கும் வரையில் இந்தியாவுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட வாய்ப்பு இல்லை என சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout