வேலைக்காரனின் 2இன்1 சர்ப்ரைஸ் இதுதான்

  • IndiaGlitz, [Tuesday,October 31 2017]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' படத்தின் 2இன்1 சர்ப்ரைஸ் இன்று மாலை வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அந்த 2இன்1 சர்ப்ரைஸ் என்ன என்பது குறித்து சற்றுமுன் தெரியவந்துள்ளது

இதுகுறித்து வெளியான வீடியோ ஒன்றில் அனிருத் கூறியதாவது: ஒரே பாடலில் இரண்டு எமோஷன்கள் உள்ள பாடல் நவம்பர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவித்தார். இறைவா மற்றும் உயிரே என காதல் மற்றும் வாழ்க்கை ஆகிய இரண்டு எமோஷன்கள் இந்த பாடலில் இருப்பதாகவும், இந்த புதிய முயற்சி எங்களுக்கே புதிய அனுபவமாக இருந்தது என்றும் அனிருத் கூறியுள்ளார். எனவே சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ரசிகர்களுக்கு நாளை மறுநாள் ஒரு இசைவிருந்து காத்திருக்கின்றது என்பது உறுதியாகியுள்ளது.

வரும் கிறிஸ்துமஸ் திருநாளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பகத்பாசில், நயன்தாரா, சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ராம்ஜி ஒளிப்பதிவில் விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

More News

'அமலாபால்' கார் வாங்கியதில் விதிமீறல் இல்லை: புதுவை அமைச்சர் பேட்டி

நடிகை அமலாபால் புதுச்சேரி முகவரியில் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதுகுறித்து வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நஸ்ரியாவின் ரீஎண்ட்ரி உண்மையா? அவரே அளித்த விளக்கம்

நடிகை நஸ்ரியா கோலிவுட்டில் பிரபலமாக இருக்கும்போதே மலையாள நடிகை பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகி, இல்லற வாழ்க்கையில் மூழ்கினார்.

டிரம்ப் கட்சியின் கொ.ப.செ ஆக கஸ்தூரி?

கடந்த சில மாதங்களாக அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி விரைவில் திமுகவில் சேரவிருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

கோலிவுட் திரையுலகின் 80களின் கனவு நாயகிகள்

கோலிவுட் திரையுலகின் 80களின் கனவு நாயகிகள்

ரஜினியின் 'காலா' படத்திற்கு தடை கேட்ட வழக்கில் அதிரடி உத்தரவு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து வரும் திரைப்படம் 'காலா'.