குக் வித் கோமாளி.. மணிமேகலை விலகியதற்கு காரணம் இதுதானா?
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை சமீபத்தில் விலகியதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அவருடைய விலகலுக்கு என்ன காரணம் என்பது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவி வருகிறது.
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தற்போது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது என்றும் கடந்த மூன்று சீசன்கள் பெற்ற வெற்றி காரணமாக இந்த சீசனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் பாலா இல்லாதது ஒரு குறையாக இருந்தாலும் மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் கலக்கி வந்தார் என்பதும் அவர் வரும் ஒவ்வொரு எபிசோடும் சூப்பராக இருந்தது என்று பார்வையாளர்கள் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிப்ரவரி 26 ஆம் தேதி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் எனது கடைசி என்றும் இனிமேல் இந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள போவதில்லை என்றும் இதுவரை தனக்கு ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் இனிமேல் தான் எடுக்கும் முடிவுகளுக்கும் ரசிகர்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை தனது இருப்பதாகவும் மணிமேகலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு பல்வேறு காரணங்களாக வதந்திகள் பரவி வருகிறது. அவற்றில் ஒன்று மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால்தான் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாக அவரோ அவருடைய கணவரோ உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments