இதுதான் 'தளபதி'யின் பவர்: அர்ச்சனா கல்பாதி டுவீட்
- IndiaGlitz, [Tuesday,December 10 2019]
தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாதி இந்த ஒரே படத்தால் சமூகவலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார் என்பது குறிபிடத்தக்கது.
இந்த நிலையில் டுவிட்டர் இணையதளம் இன்று வெளியிட்டுள்ள தகவல் ஒன்றில் 2019ம் ஆண்டில் மிக அதிகமாக புகழ்பெற்ற 10 ஹேஷ்டேக்குகள் குறித்த விவரங்களை அறிவித்துள்ளது. இதில் இந்திய அளவில் ஹிட்டான ஹேஷ்டேக்குகளில் ‘பிகில்’ திரைப்படத்தின் ஹேஷ்டேக் 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய அளவில் ஒரு திரைப்படத்தின் ஹேஷ்டேக்காக பிகில் படத்தின் ஹேஷ்டேக் மட்டுமே இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
முதல் பத்து பிரபலமான ஹேஷ்டேக்குகளில் முதலிடத்தில் லோக்சபா தேர்தலிலும், இரண்டாம் இடத்தில் சந்திரான் 2வும், ஐந்தாவது இடத்தில் ஆர்டிகல் 370, ஏழாவது இடத்தில் தீபாவளி, பத்தாவது இடத்தில் ரம்ஜான் பண்டிகை ஆகியவை இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தகவல் குறித்து அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது இதுதான் ’தளபதியின் பவர்’, பிகில் அனைத்து சாதனைகளையும் ஏற்படுத்திவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். அர்ச்சனா கல்பாதியின் இந்த டுவிட்டுக்கும் ரீவிட்டுக்களும், லைக்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
#PowerOfThalapathy #Bigil #BrokeAllRecords https://t.co/EMxWzKEHd8
— Archana Kalpathi (@archanakalpathi) December 10, 2019
And these men were the most Tweeted handles in entertainment #ThisHappened2019 pic.twitter.com/PFL92ThJg9
— Twitter India (@TwitterIndia) December 10, 2019
From #chandrayaan2, to #diwali and #eidmubarak - 2019 was a year for celebrations on Twitter in India. Here are the top most Tweeted about hashtags in 2019 #ThisHappened pic.twitter.com/as1791mPzv
— Twitter India (@TwitterIndia) December 10, 2019