இதுதான் குந்தவையின் உண்மையான புகைப்படமா? பிரபலத்தின் நீண்ட விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியானதில் இருந்து அந்த படத்தின் கேரக்டர்கள் குறித்த ஆய்வுகளை நெட்டிசன்கள் தொடங்கிவிட்டனர். மேலும் இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்கள் பலர் தஞ்சைக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுதான் குந்தவையின் ஒரே புகைப்படம் என சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்து சமூக வலைதள பிரபலம் வெங்கடேஷ் ஆறுமுகம் என்பவர் விரிவாக விளக்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இதுதான் குந்தவை புகைப்படம் என நகைச்சுவையாக வெளியிட்டிருந்த நிலையில் அந்த புகைப்படம் தான் உண்மையான குந்தவை என வைரலாகி வருகிறது. இதற்கு அவர் கொடுத்துள்ள விளக்கம் பின்வருமாறு:
சிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்”
2 தினங்களுக்கு முன்பு குந்தவை புகைப்படம் என நான் பகடியாக போட்ட பதிவு உலகம் முழுவதும் பல இணைய தளங்களில் பகிரப்பட்டு பலர் சிரித்தும், பலர் திட்டியும், பலர் அப்படியே நம்பியும் கலவையான விமர்சனங்களை அங்கு தந்து இருந்தனர்! ஓ நீ தானா அது! உனக்கு வேற வேலை இல்லையா? என்று கேட்பவர்களுக்கு..
எனக்கு உணவு, மதம், சாதி சார்ந்த சார்பு நிலையோ அல்லது சங்கம், அணி, கட்சி இப்படி எந்த குழு அரசியல் ஆதாயமோ ஏதுமில்லை! வதந்திகளை கிளப்புவது என் வேலையும் இல்லை! கிட்டத்தட்ட 30 ஆண்டுகால என் மேடை அனுபவத்தில் அடக்குமுறைகள், மூடநம்பிக்கைகள், பிற்போக்கான கருத்துகள் இவற்றை எவரும்..
முகம் சுளிக்காத வண்ணம் காலத்திற்கேற்றபடி பகடி செய்து வருகிறேன்.
கார்ட்டூனிஸ்ட்டுகள் கேலி சித்திரங்கள் வரைவது போல மேடைக் கலைஞர்களான நாங்கள் சமூக அக்கறையுடன் எவரையும் தரம் தாழ்த்தாத வண்ணம் செய்யும் நையாண்டியில் ஒரு வகை இது! நீ சொல்லப்போற பொய்யில் கொஞ்சம் உண்மையும் இருக்கணும்!
இருந்தா மக்கள் அதை அப்படியே உண்மைன்னு நம்புவாங்க! இதுதான் ஏமாற்றுக்காரர்கள் கையில் எடுக்கும் முதல் ஆயுதம்! அறிவியலும், விஞ்ஞானமும், தகவல் தொழில்நுட்பமும் சிறந்து விளங்கும் இந்த 21ஆம் நூற்றாண்டிலேயே இப்படி ஒரு பொய்யான செய்தியை பரப்பி கவனம் ஈர்க்க முடிகிறது என்றால் அதிகம் வேண்டாம்..
ஒரு 50 வருடங்களுக்கு முன்பு கூட எதையும் சொல்ற விதத்தில் சொல்லி நம்ப வைத்துவிடலாம் என்பதே நிதர்சனம். எதையும் நம்பாதீர்கள் என்பதற்காகத் தான் அந்தப் பதிவே! இதெல்லாம் நம்புறா மாதிரியா இருக்கு என்று நானே அதில் நக்கலாக சில குறியீடுகளைத் தந்து இருந்தேன்! அப்போதே அதை புரிந்து கொண்டு ரசித்தவர்களுக்கு..
என் பணிவான வணக்கங்கள்! இதையும் நம்பி பகிர்ந்தவர்களுக்கு என் ஆழ்ந்த நன்றிரங்கல்கள்! ஆனால் ஆறுதலான செய்தி அந்தப் பதிவில் வந்த அழகான, அசத்தலான, நக்கலான, நகைச் சுவையான பின்னூட்டங்கள் நமது தமிழ் மக்கள் அப்படி எதையும் நம்ப முட்டாள்கள் இல்லை என்பதை உணர்த்தியது! இதை ஃபேஸ்புக்..
தகவல் பாதுகாப்பு அணிக்கு நம் மக்கள் ரிப்போர்ட் அடிக்க இது பொய்யான செய்தி என்று முகநூலில் இருந்து என் பதிவை நீக்கிவிட்டது! ஆனால் வேறு தளங்களில் இது இன்னும் சுற்றுகிறது! எனது கற்பனைக்கு சிலர் பட்டி டிங்கரிங் பார்த்தும் சிலவற்றை இணைத்து எழுதுகிறார்கள்! (உதாரணம் குந்தவையின் ஓவிய வரைபடம்)
இந்த செய்தியை எங்கு படித்தாலும் அதை நம்ப வேண்டாம்! இது போன்ற பகிர்வை வேறு சில வடமாநிலங்களில் செய்து இருந்தால் நிச்சயம் இந்தளவு விழிப்புணர்வு இருந்திருக்காது என்றார் ஒரு நண்பர்! ஆம் அவர்களும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதே என் விருப்பம்! அந்த வகையில் ஒரு தமிழனாக பெருமிதம் கொள்கிறேன்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments