அடுத்த அமெரிக்க அதிபர் இவர்தான்… கருத்துக் கணிப்பில் வெளியான சுவாரசியத் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவிலும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் டெனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். கொரோனா தடுப்பு பணிகளுக்கு இடையிலும் பல மாகணங்களில் நேரடியாக மற்றும் நேர்காணல் வாயிலாக கடுமையான பிரச்சாரத்தை ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து நேற்று கருத்துத் தெரிவித்த குடியரசு கட்சி உறுப்பினர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தை விட தற்போது ட்ரம்ப் அதிக உற்சாகத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் எனத் தெரிவித்து இருக்கிறனர். மேலும் மக்களை அதிகளவில் ஈர்த்து வருகிறார் எனவும் குடியரசு கட்சி சார்பில் தெரிவித்து உள்ளனர்.
அந்நாட்டில் தற்போது தேசிய அளவில் நடத்தப்பட்டு வரும் கருத்துக் கணிப்புகளில் பல வாரங்களாக ஜனாநாயகக் கட்சி வேட்பாளர் ஜோபிடனுக்கு பின்தள்ளிதான் ட்ரம்ப் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதைய கருத்துக்கணிப்பில் ட்ரம்ப் பின்தங்கியிருந்தாலும் அடுத்த அதிபராக ட்ரம்ப் தான் ஆட்சியமைக்கப் போகிறார் என்றும் மக்கள் அவரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் இன்னொரு கருத்துக்கணிப்பு வெளியாகி அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வருகிற நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் கடுமையான மாகாணமாகக் கருதப்படும் புளோரிடா, அரிசோனா, மிச்சிகன் மாகாணங்களில் ஜோபிடனே முன்னிலையில் இருக்கிறார் என்று சிஎன்என் நேற்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து இருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின்போது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பிலும் ட்ரம்ப் பின்தங்கியே இருந்தார். பல வாரங்களாக ஹிலாரி கிளிண்டனே முன்னிலை வகித்தார். ஆனால் இறுதியில் ட்ரம்ப் வெற்றிப் பெற்று ஆட்சியமைத்தார். அதைப்போல ட்ரம்ப் பின்தங்கயிருந்தாலும் அவரே வெற்றிபெறுவார் என்று கருத்துக்கணிப்பு வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், பொதுமக்கள் அளிக்கும் வாக்கைவிட மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்படும் 270 உறுப்பினர்களே அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதால் இறுதி முடிவு என்னவாகும் என்பது தற்போதைய அளவில் கணிக்க முடியாத ஒன்று என்றும் சிலர் கூறுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments