75 ஆண்டு ஐ.நா வரலாற்றில் இதுவே முதல்முறை: பொதுக்குழுக் கூட்டம் பற்றிய பரபரப்பு அப்டேட்!!!
- IndiaGlitz, [Thursday,July 23 2020]
ஐ.நா. சபையின் பொதுக்குழுக் கூட்டம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்க விருக்கிறது. இக்கூட்டத்திற்காக ஆண்டுதோறும் உலகத் தலைவர்கள், ஐ.நா. சபையின் உறுப்பினர்கள், பார்வையாளர்கள், விவாதத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் எனஅனைவரும் ஜெனீவாவில் மொய்ப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ கான்பரன்சிஸ் வழியாக நடைபெறும் என்னும் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று தாக்கம் உலகம் முழுவதும் ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில் உலகத் தலைவர்கள் ஐ.நா. வின் பொதுக்குழுக் கூட்டத்தில் நேரடியாகக் கலந்து கொள்வது பாதுகாப்பானது அல்ல எனக் கருதி இந்த முடிவு எட்டப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் உலகநாடுகளின் 193 ஐ.நா. சபை உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் நேரடியாகக் கலந்து கொள்ளாமல் முன்னமே அவர்கள் நிகழ்த்த இருக்கும் உரைகளை, ஆலோசனைகளை வீடியோவாக பதிவு செய்து ஐ.நா. சபைக்கு அனுப்பி விடவேண்டும். பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் நேரத்தில் இந்த உரை சபையின் அரங்கில் ஒளிபரப்பப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கவுள்ள கூட்டத்தொடரில் 21 வாக்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதன்மீதான விவாங்கள் அடுத்தடுத்து நடைபெறும். ஐ.நா. சபைக் கூட்டத்தில் எடுக்கப் படுகிற முடிவுகள், கருத்துகள் கொரோனா பெருந்தொற்று நேரத்தில் உலக மக்களுக்கு ஒரு பெரும் விடிவாக இருக்கும் எனவும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. உலக நாடுகளிடையே பெருந்தொற்று காலத்தில் புரிந்துணர்வு மிகவும் அவசியமான ஒன்று என்பால் தற்போதைய சூழலில் ஐ.நா.வின் பொதுக்கூட்டம் மிகவும் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது. ஐ.நா. சபைத் தொடங்கப்பட்ட 75 ஆண்டுகால வரலாற்றில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக உலகத் தலைவர்கள் விவாதங்களில் கலநது கொள்ள இருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.