தனியார் ஆம்புலன்ஸ்-களுக்கு கட்டணம் இவ்வளவுதான்....! தமிழக அரசு அறிவிப்பு...!
- IndiaGlitz, [Friday,May 14 2021]
சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்சுகளுக்கான, கட்டணத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
ஆக்சிஜன் வசதியில்லாமல் 10 கிமீ வரை நோயாளிகளை அழைத்துச்செல்லும் ஆம்புலன்சுகளுக்கு ரூ.1500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 10 கிமீ-க்கும் அதிகமானால், கூடுதல் கட்டணமாக ரூ.25 வசூல் செய்து கொள்ளலாம். ஆக்சிஜன் வசதியுடன் 10 கீ.மீ நோயாளிகளை அழைத்துச்செல்ல கட்டணமாக ரூ.2000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக செல்லக்கூடிய ஒவ்வொரு கி.மீ-க்கும் ரூ. 25 வசூல் செய்து கொள்ளலாம்.
வெண்டிலேட்டர் வசதியுடன் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ்களில், 10கி.மீ-க்கு ரூ.4000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக செல்லக்கூடிய 1கி.மீ-க்கும் ரூ.100 அதிகமாக வசூலிக்கலாம்.
நோயாளிகளிடம் இருந்து தனியார் ஆம்புலன்சுகள் அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றன என்று, குற்றச்சாட்டுகள் வந்ததை தொடர்ந்து தமிழக அரசு இம்முடிவை எடுத்துள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.