இது என்ன இந்தியாவா..!? போராடியவர்களை விடுவித்த பாகிஸ்தான் நீதிபதி.

  • IndiaGlitz, [Tuesday,February 18 2020]

கடந்த மாதம் பாகிஸ்தானின் தேசிய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் முன் போராடிய 23 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் மனு குறித்த விசாரணை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த விசாரணையின்போது போராட்டக்காரர்களை நடத்தும் விதம் குறித்து குறிப்பிட்ட தலைமை நீதிபதி அதஹர் மினால்லாஹ், இது இந்தியா அல்ல பாகிஸ்தான். இங்கே அனைவரின் சட்ட உரிமையும் காக்கப்படும் எனக் கூறி அவர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்தார்.

இந்த மனு விசாரணையின் போது, ஜனநாயக நாடு மக்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு மக்கள் அச்சம் கொள்ளக் கூடாது. நீதிமன்றம் மக்களின் உரிமையைக் காக்கவே இருக்கிறது. இது இந்தியா இல்லை, பாகிஸ்தான். இங்கே மக்களின் சட்ட உரிமை பாதுகாக்கப்படும். அதனால் போராட்டம் நடத்த வேண்டுமென்றால் அனுமதி கேளுங்கள், கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுங்கள் என கூறினார் நீதிபதி அதஹர் மினால்லாஹ்.

அதன் பிறகு 23 தொழிலாளர்களின் மீது போடப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்கள் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கை திரும்பப்பெறப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அவாமி வொர்கர்ஸ் கட்சியின் உறுப்பினர்களில் ஒருவரான அமார் ராஷித் முதல் தகவல் அறிக்கை திரும்பப்பெற்ற ஆவணத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும் எங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. இந்த நாட்டில், மக்களின் எதிர்ப்பு, அமைதியான போராட்டம் மற்றும் கருத்து சுதந்திரத்தை அடக்க மாட்டார்கள் என நம்பிக்கை உள்ளது, என பதிவிட்டிருந்தார்.
 

More News

2019 இல் நகைச்சுவை மூட்டிய விலங்குகளின் புகைப்படங்கள்- Photography Awards

புகைப்பட கலைஞர்களை ஈர்க்கும் விதமாக The comedy wild life என்னும் தலைப்பில் சென்ற வருடம் ஒரு புகைப்பட பரிசு போட்டி நடத்தப் பட்டது.

ஐந்து மொழிகளில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்: ஆச்சரிய தகவல்

சிவகார்த்திகேயன் தற்போது 'டாக்டர்' மற்றும் 'அயலான்' ஆகிய இரண்டு படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் என்பதும், இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று

இந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு எரிச்சலூட்டுகிறது: ஏ.ஆர்.ரஹ்மான்

பழைய சூப்பர் ஹிட் திரைப்படங்களை ரீமேக் செய்வது போலவே பழைய சூப்பர் ஹிட் பாடல்களை ரீமேக் செய்வது கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து வரும் வழக்கமாக உள்ளது 

அதர்வாவின் அடுத்த பட டைட்டிலில் கவுதம் மேனன் கனெக்சன்

ஜெயம் கொண்டான்', 'வந்தான் வென்றான்', 'சேட்டை போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில், நடிகர் அதர்வா நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக

கொரோனா பாதித்த மனைவியை காதலோடு பார்த்துக்கொள்ளும் 87 வயது முதியவர்..! வீடியோ.

தனது மனைவியைக் காண வரும் முதியவர் அவருக்கு உணவூட்டும் காட்சிகள் வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.