இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி இதுதான்: செல்வராகவன்
Send us your feedback to audioarticles@vaarta.com
’துள்ளுவதோ இளமை’ முதல் ’என்ஜிகே’ வரை பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் செல்வராகவன் அவர்கள் ஏற்கனவே இயக்கி முடித்துள்ள ’நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் ’மன்னவன் வந்தானடி’ ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் விரைவில் ’புதுப்பேட்டை 2’ திரைப்படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் அவ்வப்போது சமூக மற்றும் அர்த்தமுள்ள கருத்துக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து வரும் செல்வராகவன், சற்று முன்னர் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொண்டே வாழ்வதுதான். அது நிம்மதியை அடியோடு ஒழித்து விடும். கடவுள் யாரையும் குறைத்துப் படைப்பதில்லை. நான் மிகச் சிறந்தவன் என்பதை எப்பொழுதும் நினைப்போம்’ என்று கூறியுள்ளார்.
மிக ஆழமான ஒரு கருத்தை அனைவரும் புரியும் வகையில் மிக எளிமையாக கூறிய செல்வராகவனுக்கு டுவிட்டர் பயனாளிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நிம்மதியான வாழக்கைக்கு தேவையான மிகச் சிறந்த கருத்து என்றும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ’புதுப்பேட்டை 2’ மற்றும் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ ஆகிய படங்களுக்காக காத்திருப்பதாகவும் ரசிகர்கள் பலர் அவருடைய டுவீட்டுக்கு கமெண்ட் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொண்டே வாழ்வதுதான். அது நிம்மதியை அடியோடு ஒழித்து விடும். கடவுள் யாரையும் குறைத்துப் படைப்பதில்லை. நான் மிகச் சிறந்தவன் என்பதை எப்பொழுதும் நினைப்போம். !
— selvaraghavan (@selvaraghavan) May 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout