குறைந்த கொரோனா மரணம் கொண்ட நாடுகளுள் இதுவும் ஒன்று!!! கொஞ்சம் ஆறுதல் தரும் செய்தி!!!

 

கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா மரணங்கள் குறைந்து இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் 2.46 விழுக்காடு மட்டுமே கொரோனா மரணங்கள் நிகழ்ந்து இருக்கின்றன என்றும் இதனால் உலக அளவில் கொரோனா மரணங்கள் குறைவாக இருக்கும் நாடுகளுள் ஒன்றாக இருந்தியாவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 22,664 பேர் கொரோனா நோத்தொற்றில் இருந்து விடுபட்டு இருப்பதாக மத்தியச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. இதுவரை 7 லட்சத்து 86 ஆயிரம் பேர் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனால் நோயில் இருந்து விடுபடுபவர்களின் எண்ணிக்கை 62.63 விழுக்காடாக உயர்ந்து இருப்பதாவும் கூறப்படுகிறது. இவர்களைத் தவிர 3 லட்சத்து 90 ஆயிரத்து 459 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டும் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றும் வருகின்றனர் என்று மத்தியச் சுகாதார்த்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள 11 மாநிலங்களின் 43 முக்கிய மருத்துவ மனைகளில் அதிக கொரோனா நோயாளிகள் இருப்பதாகவும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் இணையம் வழியாக வழிகாட்டி வருவதாகவும் செய்கிதள் தெரிவிக்கின்றன.