இது உண்மையில்லை, ஆனா கேட்கவும் பாக்கவும் நல்லாயிருக்கு: பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ!
Send us your feedback to audioarticles@vaarta.com
’இது உண்மை இல்லை ஆனால் கேட்கவும் பார்க்கவும் நல்லா இருக்கு’ என பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ ஜெயமோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ராஜூ ஜெயமோகன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது தெரிந்தது. இருப்பினும் அவருக்கு ஒருசில திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் அதில் ஒரு சில படங்களில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார்’ திரைப்படத்தில் ராஜூமுருகன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ராஜூ ஜெயமோகன், ‘சர்தார் திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை. நான் நடித்ததாக வெளிவந்திருக்கும் தகவலில் உண்மை அல்ல’ என்று கூறியுள்ளார். ’இருப்பினும் இதுபோன்ற விஷயங்களை கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார். ராஜூவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
I wish I was a part in #sardar. This isn’t true. I am not in the movie aana Idhellam kekkavum paakavum nalla irukku ?? @Psmithran @RedGiantMovies_ wishing #sardar a massive opening ?? https://t.co/P7ydtIOxxt
— Raju Jeyamohan (@rajuactor91) June 27, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments