கொரோனா நேரத்தில் இதெல்லாம் வேண்டாமே... பெண்களை நோக்கி வேண்டுகோள் வைக்கும் எகிப்து!!!

  • IndiaGlitz, [Tuesday,June 30 2020]

 

கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நேரத்தில் எகிப்து அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று “கர்ப்பிணி பெண்களை மிக எளிதாக தாக்கிவிடும் அபயாம் இருப்பதாகக் கூறி” பெண்கள் கருவுறுதலைத் தள்ளிப்போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது அந்நாட்டு அரசு. கொரோனா நோய்த்தொற்று மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலங்களை மிக எளிதாகத் தாக்கிவிடும் தன்மைக் கொண்டது. ஏற்கனவே, பெண்கள் கருவுற்று இருக்கும்போது அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் சற்று பலவீனம் கொண்டதாக இருக்கும். எனவே கொரோனா பரவல் நேரத்தில் பெண்கள் கருவுறுதலை தள்ளிப்போட வேண்டும் என்ற கோரிக்கையை தீவிர பிரச்சாரமாக மேற்கொண்டு வருகிறது அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், “கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தி கருவுறுதலைப் பெண்கள் தற்காலிகமாகத் தள்ளி வைக்க வேண்டும். கருவுற்றிருக்கும் பெண்களுக்கு நடைப்பயிற்சி மிகச் சிறந்த உடற்பயிற்சி அவசியம். ஆனால் தற்போதைய கொரோனா காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளிவருவது ஆபத்தாக முடியும். எனவே வீட்டுக்குள்ளே அவர்கள் தொடர்ந்து இயக்கத்தில் இருக்க வேண்டும்‘’ எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

சுகாதாரத் துறையின் முடிவிற்கு அந்நாட்டின் மருத்துவர்கள் தற்போது வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். கொரோனாவின் ஆரம்பக் கட்த்திலேயே இந்த முடிவை எடுத்து இருக்க வேண்டும் எனவும் சில கருத்து தெரிவித்து உள்ளனர். 9 கோடிக்கும் மேல் மக்கள் தொகையை கொண்டுள்ள எகிப்தில் தற்போது வரை 66 ஆயிரத்து 754 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் 2 ஆயிரத்து 872 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

90 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 3000க்கும் அதிகமாக இருந்து வரும் நிலையில் இன்றும் 3000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி: மருத்துவமனையின் அறிக்கை

தமிழகத்திலும் தலைநகர் சென்னையிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள்

என் மனைவி குங்குமம் வைச்சிக்க விரும்பல... வளையல் போட்டுக்க மறுக்கிறா???அதனால விவாகரத்து கொடுத்துடுங்க...

உலகம் முழுவதும் பெண்ணிற்கு அழகு இதுதான் என ஒவ்வொரு மதக் கலாச்சாரமும் சில விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறது.

தனுஷின் 'ஜகமே தந்திரம்' படம் குறித்த ஒரு ஆச்சரிய அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள்

ஊரடங்கு சமயத்தில் பசியால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை: பிரதமர் மோடி 

பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் பேசியதன் சாரம்சம்