இது என்னுடைய இந்தியா அல்ல' ஏ.ஆர்.ரஹ்மான்
- IndiaGlitz, [Saturday,September 09 2017]
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஒன் ஹார்ட்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்று மும்பையில் நடைபெற்றபோது பத்திரிகையாளர்களை சந்தித்த ரஹ்மானிடம், 'பெங்களூர் மூத்த பத்திரிகையாளர் கெளரி லன்கேஷ் படுகொலை குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு, ''கெளரி லங்கேஷின் படுகொலை குறித்து வருத்தம் அடைந்தேன். இந்த மாதிரி சம்பவங்கள் இந்தியாவில் நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் அது என்னுடைய இந்தியா அல்ல. என்னுடைய இந்தியா வளர்ச்சியை நோக்கியும், அன்பை நோக்கியும் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்' என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.
மேலும் 'ஒன்ஹார்ட்' திரைப்படம் குறித்து அவர் கூறியபோது, 'ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனை வைத்து உருவாக்கப்பட்ட 'திஸ் இஸ் இட்' (This is it) என்ற கன்சர்ட் வகைத் திரைப்படம் பிரமாண்டமான வெற்றியை பெற்றதை அடுத்து, இதை முன்மாதிரியாகக் கொண்டு உருவான படம் தான் 'ஒன் ஹார்ட்' படம்' என்று கூறினார்.