இது ஸ்டிரைக் அல்ல, சில திருத்தங்கள்: விஷால் நீண்ட விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவில் புதிய படங்க்ள் ரிலீஸ் இல்லை, படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இல்லை, அதுமட்டுமின்றி சென்னையை தவிர தமிழகம் முழுவதும் தியேட்டர்களும் இயங்கவில்லை. இந்த ஸ்டிரைக் எதற்கு? என்று பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ள நிலையில் விஷால் இதுகுறித்து ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இப்போது நடந்துகொண்டிருப்பதை என்னால் ஸ்ட்ரைக் என்று சொல்ல முடியாது. இது தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியை புதுபிக்க , திருத்தங்கள் செய்ய , புத்துணர்ச்சியடைய செய்ய நாங்கள் எடுத்துள்ள முடிவு என்று சொல்லலாம். GSTக்கு பின் தமிழ் சினிமாவில் இந்த திருத்தங்கள் செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதில் முதலாவது கியூப் பிரச்சனை , இதை கியூப் பிரச்சனை என்று சொல்லுவதே முதலில் தவறு. DSP ( Digital Service Provider ) பிரச்சனை என்று தான் சொல்ல வேண்டும்.
ஹாலிவுட் படங்களுக்கு DSP குறைந்த கட்டணத்தை தான் வாங்குகிறார்கள். ஆனால் நம்முடைய படங்களுக்கு தான் இருப்பதுலேயே மிகவும் அதிகமான கட்டணத்தை வாங்குகிறார்கள். யு.எஸ்.ஏ , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் படத்தை திரையிடVPF ( Visual Projection Fees ) கட்டணம் என்பதே கிடையவே கிடையாது. நாங்களும் அதே போல் இங்கே கட்டவேண்டிய தேவையே இல்லை. நாங்கள் பன்னிரண்டு வருடங்களாக அவர்களுக்கு அதிக கட்டணத்தை செலுத்தி வருகிறோம். ஒரு தியேட்டர் என்றால் விதிமுறை படி சொந்தமாக லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும்.
இங்கே முதலில் திரையரங்குகளில் சினிமா ப்ரோஜெக்டர் ஒன்று இருந்தது. அதை எடுத்து வைத்த பின் டிஜிட்டல் சினிமா கம்பெனி ஒருவன் டிஜிட்டல் ப்ரோஜெக்டர் ஒன்றை கொண்டு வருகிறான். இதை நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள். நான் உங்களுக்கு இதை லீஸ்சுக்கு தருகிறேன். உங்களால் முடிந்தால் முன்பணம் கொடுங்கள் இல்லையென்றால் திரையரங்குக்கு வரும் முழு விளம்பர வருவாயையும் நாங்கள் எடுத்துக்கொண்டு இதை கழித்துகொள்கிறோம். முன் பணம் செலுத்தினால் விளம்பர வருவாயில் பாதி பாதி பிரித்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். ஒரு E சினிமா ப்ரொஜெக்டரின் விலை 6 லட்சம் ரூபாயாக இருக்கும் , D சினிமா ப்ரொஜெக்டரின் விலை ரூபாய் 25 லட்சத்துக்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். 25லட்ச ரூபாய் ப்ரொஜெக்டருக்கு தயாரிப்பாளராக நாங்கள் பணம் செலுத்தி எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் அவர்கள் எங்களிடம் வசூலித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது புதிதாக சில டிஜிட்டல் ப்ரோவைடர்ஸ் வந்துள்ளார்கள். அவர்கள் இப்போது கட்டுவதை விட ஐம்பது சதவிகிதம் கம்மியாக பணம் செலுத்தினால் போதும் என்கிறார்கள். அதே போல் 3 வருடம் கழித்து சின்ன திரைப்படங்களுக்கு VPF கட்டணமே கட்ட வேண்டும். பெரிய படங்களுக்கு நான்கு வருடம் கழித்து VPF சார்ஜஸ் கட்ட தேவை இல்லை என்று கூறியுள்ளார்கள்.
திரையரங்க உரிமையாளர்கள் ஒப்பந்த படிவத்தில் இருந்தவற்றை படிக்காமல் கையெழுத்திட்டுள்ளனர். என்னுடைய படம் வெளியாகும் போது என்னுடைய நண்பன் ஒருவன் நடித்த படத்தின் ட்ரைலரை போடவேண்டும் என்றால் அது முடியவில்லை. ஆனால் அவர்கள் ஜவுளி கடை , நகை கடையின் விளம்பரத்தை ஒளிபரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். என்னுடைய படத்தின் நடுவில் ஒரு ட்ரைலரை ஒருமுறை போடுவதற்கு என்னிடமே 675ரூபாய் பணம் செலுத்த சொல்கிறார்கள். நான் இதுவரை VFF நிறுவனத்தின் மூலம் 9 படங்களை தயாரித்துள்ளேன். அந்த 9 படங்களுக்காக இவர்களுக்கு எவ்வளவு பணம் செலுத்தியிருப்பேன். எத்தனை ப்ரொஜெக்டர்கள் இப்போது எனக்கு சொந்தமாக இருக்க வேண்டும் ?? மொத்த சினிமாவும் எவ்வளவு ரூபாய் செலுத்தியிருக்கும் என்று யோசித்து பாருங்கள். இது தான் VPF பிரச்சனை. ப்ரொஜெக்ட்டருக்கான பணத்தை தியேட்டர்காரர்கள் தான் கட்ட வேண்டும். நாங்கள் படமெடுத்து கன்டென்டை மட்டும் தான் கொடுப்போம். அதற்கு மாஸ்டரிங் பணத்தை மட்டும் தான் எங்களால் செலுத்த முடியும். சொந்த ப்ரொஜெக்டர் கூட இல்லாமல் ஒருவரால் எப்படி ஒரு திரையரங்கை நடத்த முடியும் ?
தற்போது திரையுலகமே கீழே சென்றுக்கொண்டிருக்கிறது. யாரிடமும் உண்மையான கணக்கு தற்போது இல்லை. கணினிமயமாக்குங்கள் என்று திரையரங்கத்தினரை நாங்கள் 8 மாதமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தியேட்டர் டிக்கெட்டுகளை கணினிமயமாக்கும் வரை நாங்கள் திரைப்படத்தை வெளியிட மாட்டோம். காலை காட்சியை பார்க்க எத்தனை பேர் வந்துள்ளார்கள் என்பது மதிய காட்சி ஆரம்பமாவதற்குள் தயாரிப்பாளர்களுக்கு தெரியவேண்டும். பார்கிங் கட்டணத்தை யாரும் இங்கு விதிமுறைபடி வாங்குவதில்லை. அதனால் தான் நான் தியேட்டர் கட்டணத்தை கணினிமயமாக்க வேண்டும் என்று கூறுகிறேன். இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
நடிகர்களின் சம்பளத்தால் தான் இவ்வளவு பிரச்சனை என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறுகிறார்கள். திரையரங்கத்தினர் முதலில் டிக்கெட்களை கணினிமயமாக்கி. முதல் நாள் முதல் ஷோ வருவாயை எங்களுக்கு தந்தால் தான் அதை நாங்கள் சம்பந்தப்பட்ட ஹீரோகளுக்கு காட்ட முடியும். அவர்களின் முதல் நாள் , முதல் காட்சி கலெக்ஷன் என்ன ?? அவருடைய படத்தை முதல் நாளில் எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்ற உண்மையையும். அவர்கள்.வாங்கும் சம்பளம் சரிதானா ?? என்பதனையும் அவர்களுக்கு உணர்த்த முடியும். அதை சரி செய்து அவர்களை சரியான சம்பளத்தை வாங்க வைக்க முடியும். எல்லோரும் 100 கோடி கிளப் , 150 கோடி கிளப் என்று சொல்கிறார்கள். அப்படி எல்லாம் எங்கேயும் எதுவும் இல்லை. என்னால் இப்போது பேங்க் லோனுக்கு கூட அப்ளே செய்ய முடியவில்லை. லோன் கேட்டால் சிரிக்கிறார்கள். என்னுடைய படம் வெளியாகிறது என்றால் எனக்கு ஏ.வி.எம் ராஜேஸ்வரி டிக்கெட் விலையே போதும் என்பேன்.
இப்போது நாம் ஒரு படத்துக்கு 150ரூபாய் கொடுத்த டிக்கெட் வாங்க வேண்டியுள்ளது. இது போக எவனோ ஒருத்தன் ஆன்லைன் சார்ஜெஸ் என்று 30ரூபாயை போடுகிறான். அதையும் கட்ட வேண்டியுள்ளது. பெரிய திரைப்படங்களை பார்க்க மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். ஆனால் அடுத்த வாரம் வெளிவரும் சின்ன படத்தை பார்க்க அவர்களால் வரமுடிவதில்லை. ஏனென்றால் ஏற்கனவே ஒரு முறை படம் பார்த்து சென்ற அவர்களிடம் பணம் இருக்காது.
ரஜினி சார் படமாக இருக்கட்டும் , புதுமுக படமாக இருக்கட்டும் இனிமேல் ரிலீஸ் ரெகுலேஷன் என்ற விஷயம் இருக்கப்போகிறது. சத்யம் தியேட்டருக்கு படம் என்றால் அவர்களுக்கு மட்டும் தான் படம் கொடுக்கப்படும் , தேவி திரையரங்கு என்றால் அவர்களுக்கு மட்டும் தான். முன்பு இருந்தது போல். சிட்டி ரிலீஸ் என்றால் .இனி வெறும் 11 திரையரங்குக்கு மட்டும் தான். முக்கியமான ஸ்க்ரீன் அனைத்தும் பெரிய படங்களுக்கு சென்றுவிட்டால் சின்ன படங்கள் எங்கே செல்லும் ?? ஒரு தியேட்டரில் உள்ள நான்கு ஸ்க்ரீன்களில் நான்கு படங்களை திரையிட்டால் நான்கு படங்களையும் பார்க்க மக்கள் வருவார்கள். ஆனால் நான்கு ஸ்க்ரீன்களிலும் ஒரே படத்தை திரையிட்டால் எப்படி நான்கு ஸ்க்ரீனும் ஹவுஸ்புல்லாகும் ?
இனி ஆன்லைன் சார்ஜெஸ் இல்லை , VPF இல்லை , உறுதியாக டிக்கெட் கணினிமயமாக்கப்படுதல் வேண்டும் மற்றும் ரிலீஸ் ரெகுலேஷன்களை நாங்கள் இப்போது உடனடியாக செய்யலாம் என்று இருக்கிறோம்.
POST TAGS: tfpcvishalதியேட்டர் டிக்கெட்கள் கணினிமயமாக்கப்பட்டால் தான் எல்லாம் சரியாகும் – விஷால் அதிரடி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com