இந்த படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் உங்களுடன் இருக்கும்: இன்று ரிலீஸாகும் படம் குறித்து விக்னேஷ் சிவன்

இது வழக்கமான சாதாரண படம் இல்லை என்றும், இந்த படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் உங்களுடன் இருக்கும் என்றும், இன்று ரிலீசாகும் படம் குறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’ராக்கி’, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வசந்த ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையில் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பதும் இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்து சற்று முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில் இந்த நல்ல படத்தை வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இது வழக்கமான படமில்லை. சமரசம் செய்யாத வேறு மாதிரியான சினிமாவை நீங்கள் உண்மையிலேயே பார்க்க விரும்பினால் இதுதான் சரியான படம். நீங்கள் நிச்சயமாக இந்த படத்தை விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு பிரேமும் ஒவ்வொரு கேரக்டர் மற்றும் நடிப்பும் உங்களுடனே இருக்கும் என்று விக்னேஷ் சிவன் புகழாரம் சூட்டியுள்ளார்.