இது என்ன 3 மணி நேர திரைப்படமா? கமல்ஹாசனுக்கு அமைச்சர் கேள்வி
- IndiaGlitz, [Saturday,December 01 2018]
கடந்த 16ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக தாக்கி அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரங்கள் முழுவதையும் சேதப்படுத்தியது. ஒருபக்கம் அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் வழங்கி வருவதாக கூறப்பட்டாலும் இன்னொரு பக்கம் அரசின் நிவாரணப்பணி மந்தமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றன.
அரசியல்வாதிகள் மாற்றி மாற்றி கஜா புயலை அரசியலாக்கி கொண்டிருக்கும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரண்டுமுறை டெல்டா பகுதிகளுக்கு நேரில் சென்று அங்கு ஏற்பட்டிருக்கும் சேதங்களை பார்வையிட்டார். நேற்று தனது டுவிட்டரில் இப்போது செய்யப்பட்டிருக்கும் உதவிகள் வெறும் முதலுதவி தான் என்றும் முழு உதவிகள் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கின்றது என்றும் அதிவிரைவில் அதனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பதில் கூறிய அமைச்சர் உதயகுமார், 'கமல்ஹாசனுக்கு அனுபவம் கிடையாது. 3 மணிநேர திரைப்படம் போலவே உடனடியாக கிளைமேக்ஸ் காட்சி வரவேண்டும் என எதிர்பார்க்கிறார். நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.