இதுதான் என்னுடைய பிரம்மாஸ்திரம்: ஸ்ரீரெட்டி பேட்டியால் அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் தெலுங்கு திரையுலக பிரபலங்களின் பெயர்களை சமீபத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்தார்.
இதனையடுத்து அவர் தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் தெலுங்கு நடிகர் சங்க அலுவலகத்திற்கு முன் அரைநிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஸ்ரீரெட்டி ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ரீரெட்டி, ஒரு பெரிய தயாரிப்பாளரின் மகன் தன்னை ஸ்டுடியோ ஒன்றில் சீரழித்துவிட்டதாகவும் அந்த நபரின் பெயர் மற்றும் புகைப்படங்களை தக்க நேரத்தில் வெளியிடவுள்ளதாகவும், இதுதான் தன்னுடைய பிரம்மாஸ்திரம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments