கொரோனா வைரஸை தடுக்க முகக்கவசம் போல இதுவும் ரொம்ப முக்கியம்!!! FDA வின் புதிய அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எப்படி பரவும்? பொருட்களின் மீது எவ்வளவு நேரம் உயிர்வாழும்? நோய்த்தொற்றில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்ளலாம்? என்பது போன்ற பல்வேறு ஆய்வு தரவுகளை அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (FDA) தொடர்ந்து புதுப்பித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பரவலில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள உலகின் அனைத்து விஞ்ஞானிகளும் பரிந்து செய்வது சமூக விலகலைத்தான். அதுவும் இன்றைய நிலைமையில் சாத்தியமில்லாமல் இருக்கிறது. மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு போக வேண்டிய அவசியம் பலருக்கு ஏற்படுகிறது.
இத்தகைய தருணங்களில் முகக்கவசத்தோடு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட Face Mask ஐ அணிந்து கொள்ளுமாறு அமெரிக்காவின் FDA வலியுறுத்து கிறது. தற்போது வெளியிட்டு அறிக்கையில் பொது மக்கள் வெளியே செல்லும்போது துணயால் ஆன முகக்கவசம் அல்லது அறுவைச் சிகிக்கை முகக்கவசத்தை கட்டாயம் அணிந்த செல்ல வேண்டும். முகக்கவசங்கள் 3 அடுக்குகள் கொண்டதாக இருக்க வேண்டும். பெரிய துகள்களை வடிக்கட்டும் வகையில் அது வடிவமைக்கப் பட்டு இருக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது. மேலும் அப்படி நாம் அணியும் முகக்கவசங்கள் 85 விழுக்காடு மட்டுடே நோய்த்தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் எனவும் FDA குறிப்பிட்டு இருக்கிறது.
இந்நிலையில் Face Mask நோய்த்தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பைக் கொடுக்கும் என FDA தற்போது பரிந்துரை செய்கிறது. பிளாஸ்டிக்கால் ஆனா முகக்கவசங்கள் தலையில் இருந்து உடலை நோக்கி நீண்ட வடிவில் முகத்தை மறைக்கும் விதமாக வடிவமைக்கப் பட்டு இருக்கும் இந்த முகக்கவசத்தால் நோய்த்தொற்றின் சிறிய துகள்கள் கூட நம்மை அண்டாது எனவும் உறுதியளிக்க முடியும். கண்கள், மூக்கு, வாய் என அனைத்து உறுப்புகளும் மறைக்கப்படுவதால் பயமில்லாமல் வெளியே செல்லலாம் என்ற பரிந்துரையை FDA கொடுத்து இருக்கிறது.
Face Mask அணிந்து கொள்வது சிறந்த வழிமுறை என கேம்பிரிட்ஸ் பல்லைக்கழகத்தின் விஞ்ஞானிகள் ஒரு கட்டுரையில் வலியுறுத்தி இருக்கின்றனர். இந்த வழிமுறைகளை தற்போது அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு தடுப்பு மையம் வலியுறுத்தி வருகிறது. சளி, நோய்த்தொற்று திரவங்கள் போன்ற எதுவும் இந்த Face Mask ஐ தாண்டி நமக்குத் தொற்றை ஏற்படுத்த முடியாது என கேம்பிரிட்ஸ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் இதை சுத்தப்படுத்துவதும் எளிது. சோப் அல்லது கிருமி நாசினி பொருட்களை கொண்டு சுத்தப்படுத்தி திரும்ப திரும்ப பயன்படுத்த முடியும்.
நெருக்கமான மக்கள் கூட்டம் உள்ள பகுதி, உணவுக்கடை மற்றும் மளிகை கடைகளில் வேலை பார்ப்பவர்கள் முகக்கவசத்தோடு இந்த Face Mask ஐ யும் அணிவது சிறந்த வழிமுறையாக இருக்கும். சிங்கப்பூர் அரசு தற்போது 12 வயதுக்கும் குறைவான அனைத்து குழந்தைகளுக்கும் Face Mask ஐ கட்டாயமாக்கியுள்ளது. முதன் முதலில் இத்தாலி விஞ்ஞானிகள் இந்த Face Mask ஐ பிறந்த குழந்தைகளுக்கான முகக்கவசமாகப் பயன்படுத்தினார்கள். தற்போது பிபிஇ உடை போன்று இந்த முகக்கவசமும் முழுமையான பாதுகாப்பை கொடுக்கும் ஒரு சாதனமாக மாறிவிட்டது. அதிக ஆபத்து உள்ள இடங்களுக்கு இந்த Face Mask மிகவும் அவசியமான ஒன்றாக தற்போது FDA பரிந்துரை செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments