உண்மையிலேயே கொரோனாவின் பிறப்பிடம் இதுதான்… உறுதிப்படுத்திய உலக விஞ்ஞானிகள் குழு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸின் பிறப்பிடம் எது என்பதைக் குறித்து உலக விஞ்ஞானிகள் 3 குழுக்களாகப் பிரிந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த ஆய்வுகள் அனைத்தும் குதிரைவாலி முகம்கொண்ட வௌவால்களிடம் இருந்து பரவியதாகவே குறிப்பிடுகின்றன. அதுகுறித்து Nature ஆய்விதழில் கட்டுரையையும் அந்தக் குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இந்தவகை வௌவால்களிடம் பல ஆண்டுகளாகவே கொரோனா வகை வைரஸ்கள் காணப்படுவதாகவும் அந்தக் குழு குறிப்பிட்டு இருக்கிறது.
கொரோனா தாக்கம் ஆரம்பித்த சமயத்தில் வௌவால்களிடம் இருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக சீன விஞ்ஞானிகள் குறிப்பிட்டு இருந்தனர். தற்போது உலக விஞ்ஞானிகளின் குழுவின் இடம்பெற்ற மருத்துவர் லாரி காரெட் தனது டிவிட்டர் பக்கத்தில் குதிரைவாலி முகம்கொண்ட கொரோனா வைரஸ்தான் தற்போது பரவி வருகிறது. இந்த ஆய்வு கொரோனா வைரஸ் விவகாரத்தில் தாக்கம் பெற்ற ஆய்வாக அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
கொரோனா வைரஸ் பரவியபோது அதன் ஆரம்பக்கட்டத்தில் அதாவது கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் 17 பேருக்கு கண்டறியப்பட்டதாக Walt street பத்திரிக்கை ஒன்று சுட்டிக்காட்டி இருந்தது. ஆனால் இன்று உலகிலுள்ள மூலை முடுக்குகளிலும் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தி மனித வாழ்க்கையையே முடக்கிப் போட்டு இருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 16,917,714 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டு இருப்பதாகவும் இதில் 6,63,942 உயிரிழப்பு நடந்திருப்பதாகவும் ஜான் ஹாப்பின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதில் உயிரிழப்புகள் அமெரிக்கா- 1,52,341, பிரேசில்- 88,634, இந்தியா -34,252, மெக்சிகோ -44,876, ரஷ்யா -13,673, UK - 45,878, இத்தாலி- 35,123, பிரான்ஸ் -30,223 எனத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
BREAKING: Multinational team uses 3 different methods to determine where #SARSCoV2 came from: each leads to horseshoe bats found widely in Asia. The virus now causing a human #pandemic has been in bats "for decades," only now reaching people.
— Laurie Garrett (@Laurie_Garrett) July 29, 2020
MOREhttps://t.co/5Cs2GD49yc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments