பயன்படுத்திய மாஸ்க், கையுறைகளை இப்படித்தான் அகற்ற வேண்டும்… மாசுகட்டுப்பாட்டு வாரியம் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெருந்தொற்று நேரத்தில் சுய பாதுகாப்பு மிக அவசியம் என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகின்றனர். இந்நிலையில் பயன்படுத்திய மாஸ்க் மற்றும் கையுறைகளை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து இருக்கிறது. காரணம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் மாஸ்க் மற்றும் கையுறைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களில் இருந்தும் மற்றவருக்கு கொரோனா நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே சுயப் பாதுகாப்பு குறித்த வழிமுறைகளைக் கடைப் பிடிக்குமாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பொது மக்கள் தங்களுடைய பாதுகாப்பு உபகரணங்களை எவ்வாறு அப்புறப் படுத்த வேண்டும். கொரோனா அறிகுறி ஏற்பட்டு தனிமைப் படத்தப் பட்டவர்கள் எந்த வழிமுறைகளைப் பின்பற்றி கழிவுகளை அகற்ற வேண்டும். மேலும் கொரோனா நோயாளிகளின் கழிவுகள் எப்படி எச்சரிக்கையாக அப்புறப் படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட வழிமுறைகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொகுத்து வழங்கியிருக்கிறது. அந்த வழிமுறைகளை மாலைமலர் செய்தியாக வெளியிட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
பொதுவாக வீடுகளில் பயன்படுத்துகிற முக கவசங்கள், கையுறைகள் ஆகியவற்றை (தொற்று இருந்தாலும், இல்லாவிட்டாலும்) மறுபயன்பாட்டை தடுக்க அவற்றை வெட்டி, ஒரு காகிதப் பையில் 72 மணி நேரம் வைத்து, பின்னர் உலர்ந்த திடக் கழிவுகளை அகற்றுவதுபோல அப்புறப்படுத்த வேண்டும்.
வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் பொது மக்களிடம் இருந்து நிராகரிக்கப்பட்ட பி.பி.இ என்னும் சுய பாதுகாப்பு உடைகளை தனியாக ஒரு குப்பைத் தொட்டியில் 3 நாட்கள் போட்டு வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு அவற்றை வெட்டி துண்டுகளாக்கி உலர்ந்த பொது திடக்கழிவுகள் போன்று அகற்றி விட வேண்டும்.
கொரோனா நோயாளிகளின் கழிவு பொருட்கள்
கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் மிச்சம் வைக்கிற உணவு மற்றும் வெற்று தண்ணீர் பாட்டில்களை உயிரிகழிவு பொருட்களுடன் சேகரிக்கக் கூடாது. அவற்றை அவர்கள் பயன்படுத்துகிற பிற பொருட்களுடன் பாதுகாப்பாக பைகளில் கட்டித்தான், கழிவு பொருட்கள் சேகரிப்பவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பொதுவான திடக்கழிவு பொருட்களுக்கு மஞ்சள் நிற பையை பயன்படுத்தக் கூடாது. அது கொரோனா வைரஸ் உயிர் மருத்துவ கழிவுகளுக்கு என்று ஒதுக்கப் பட்டுள்ளது.
கழிவுகள் உருவாவதை தவிர்க்க முடிந்தவரை உணவுகளை வழங்குவதற்கு அகற்ற தேவையற்ற, (நான்-டிஸ்பொஸபுள்) பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். பொருத்தமான முன்னெச்சரிக்கையுடன் அவற்றை பயன்படுத்த வேண்டும். சுத்தம் செய்யப்பட வேண்டும். மருத்துவ மனைகளின் வழிகாட்டலின்படி கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
ரெயில் பெட்டிகள் போன்ற தற்காலிக சுகாதார மையம் உள்ளிட்ட தனிமை வார்டுகளில் கழிவுகளைப் பிரித்து பராமரிக்க ஏதுவாக வெவ்வேறு வர்ண குப்பைத் தொட்டிகளை வைத்திருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று கழிவு பொருட்களை அதற்கான பிரத்யேக குப்பைத் தொட்டியில் போட வேண்டும். கழிவுகளை அகற்றுவதற்கு இரட்டை மடிப்புள்ள பையை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் குப்பைத் தொட்டியில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
கொரோனா தனிமை வார்டுகளில் பயன்படுத்திய முகத்தை முழுமையாக மறைக்கிற பேஸ் ஷீல்டு, சுய பாதுகாப்பு உடைகள், கருவிகள் ஆகியவற்றை சிவப்பு நிற பையில் போட்டு வைக்க வேண்டும். அங்கு பயன்படுத்திய 3 மடிப்பு முக கவசங்கள், தலை முடிகள், காலணி முடிகள், லினன் கவுன் போன்றவற்றை மஞ்சள் நிற பையில் போட்டு வைக்க வேண்டும். கொரோனா பாதித்தவர்கள் பயன்படுத்திய முக கவசங்கள், டிஷ்ஷு பேப்பர்கள், கழிப்பறை பொருட்கள் போன்றவற்றை உயிரி மருத்துவ கழிவுகள் ஆகும். அவற்றை மஞ்சள் நிற பையில் போட்டு அகற்ற வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியும் வலியுறுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com