ட்ரம்பிடம் இருந்து விவாகரத்து பெற்றால்… மெலானியாவைச் சுற்றும் சில திடுக்கிடும் கேள்விகள்!!!
- IndiaGlitz, [Friday,November 13 2020]
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து ட்ரம்ப் எப்போது ஓய்வு பெறுவார்? அவரை எப்போது விவாகரத்து செய்யலாம் எனச் சில ஆண்டுகளாகவே மெலனியா ட்ரம்ப் காத்துக் கொண்டிருந்தார் என்ற தகவலை சிலர் சந்தேகம் இல்லாமல் வலுவாகவே தெரிவிக்க தொடங்கிவி ட்டனர். அந்த வகையில் வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளராக பதவி வகித்து வந்த ஓமரோசா மணிகோல்ட் நியூமன் என்பவரும் உறுதியாகவே மெலனியா விவாகரத்துக்குத் துணிந்து விட்டார் எனக் கடந்த சில தினங்களாக கூறிவருகிறார்.
மேலும் அவர் ட்ரம்பிடம் இருந்து விவாகரத்துப் பெற்றால் எவ்வளவு நட்டத்தொகை கிடைக்கும் என்பது வரை தற்போது ஊடகங்கள் பரபரப்பை கிளப்பத் தொடங்கி விட்டன. ஒருவேளை மெலானியா தற்போது ட்ரம்பை விவகாரத்து செய்தால் அவருக்கு 63 மில்லியன் டாலர் தொகை நஷ்ட ஈடாகக் கிடைக்கும் சட்ட வல்லுநர் ஒருவர் தெரிவித்து உள்ளார். இந்தத் தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மெலானியா மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்தப் பந்தத்தினால் பரோன் எனும் ஒரு மகனும் இருக்கிறார். இந்தப் பந்தத்தை முறித்துக் கொண்டால் பரோன் யாரிடம் வளருவான் என்பது அடுத்த கேள்வியாகத் தற்போது முன்வைக்கப் படுகிறது. 14 வயதாகும் பரோன் எடுக்கம் முடிவே இதில் இறுதியாக இருக்கும் என்றும் சில சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கி விட்டனர்.
மேலும் இதற்குமுன் அதிபர் பதவியில் இருக்கும்போதே ட்ரம்ப்பை மெலானியா விவாகரத்து செய்ய துணிந்திருந்தால் அதற்கு ட்ரம்ப் மறுப்பு தெரிவித்து இருப்பார். அதனால்தான் இவ்வளவு நாள் பொறுமையாக மெலானியா காத்திருக்க வேண்டி வந்தது என்றும் கருதப்படுகிறது. இந்நிலையில் ட்ரம்பிடம் இருந்து பிரியும் மெலானியாவிற்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணம் கிடைக்கும் என்று பெர்க்மேன் பாட்ஜர் நியூமேன் மற்றும் ரோட் நிர்வாக பங்குதாரர் ஜாக்குலின் நியூமன் போன்றோர் தெரிவித்து உள்ளனர். மேலும் பரோன் பெரும்பாலும் மெலானியாவிடம் வளருவதற்கே வாய்ப்பு அதிகம் இருப்பதாகச் சில சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.