வதந்திகளை நம்ப வேண்டாம்: கமல்ஹாசன் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Sunday,December 16 2018]

கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன் வரும் பாராளுமன்ற தேர்தலில் முதல்முறையாக தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறார். அவ்வபோது மக்களை சந்திப்பது, கஜா புயலின்போது நிவாரண பணிகளை ஆய்வு செய்வது, கட்சி தொண்டர்களை அரவணைத்து செல்வது என கமல்ஹாசன் செயல்பட்டு வருவது தெரிந்ததே

இந்த நிலையில் கமல்ஹாசனின் கட்சி, ஒரு பெரிய திராவிட கட்சியின் கூட்டணியில் இணையவுள்ளதாக இணையதளங்களில் செய்தி பரவியது. இரண்டு திராவிட கட்சிகளின் மாற்றாக கமல்ஹாசனின் கட்சியை மக்கள் நினைத்து கொண்டிருகும் நிலையில் திடீரென ஒரு திராவிட கட்சியுடன் கூட்டணி என்று வெளிவந்த செய்தி மக்களை அதிருப்தி அடைய செய்தது.

ஆனால் இந்த செய்தியை வதந்தி என அறிவித்த கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம் தனித்தே நிற்கும் என்றும் கூட்டணி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம் என்று கூறியுள்ளார். கமல்ஹாசனின் இந்த விளக்கத்தால் அவரது கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.