கொரோனாவின் தீவிரத்தன்மைக்கு இதுவும் காரணம்தான்!!! விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோய்த்தொற்று தீவிரம் அடைந்து வருவதற்கு வயதானவர்களிடம் காணப்படும் அழற்சித் தன்மையும் ஒரு காரணமாக இருக்கலாம் விஞ்ஞானிகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றால் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். இதை Inflamm-aging அல்லரது Inflamm–ageing என்றும் அழைப்பர். அதாவது வயதானவர்களிடம் இயல்பிலேயே ஒரு அழற்சித் தன்மை இருப்பதை விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். வயதாகும்போது உடல் முழுவதும் ஏற்படும் வீக்கம் போன்ற குறைப்பாட்டினால் அவர்கள் எளிதாக கொரோனா நோய்க்கு ஆட்படுகின்றனர் எனத் தற்போது வெளியாகி இருக்கும் ஆய்வில் தெரியவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லண்டன் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் ஆர்னே அக்பர் மற்றும் டெரோக் கில்ராய் இருவரும் வயதான வர்களிடையே கொரோனா நோய் ஏற்படும்போது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியில் வீக்கத்தின் தாக்கம் குறித்து ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தி வீக்கத்தைக் குறைப்பது ஒரு Therapeutic சிகிச்சை ஸ்டிராடஜியை அளிக்கக் கூடும் என்று அவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு வயதான கொரோனா நோயாளிகளிடையே விளைவுகளை சரிசெய்வதற்கும் ஏதுவாக அமையும் எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான அறிக்கையை Journal of Science வெளியிட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விவாதத்தைக் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் நமது நோய் எதிர்ப்பு அமைப்பு வயதுக்கு ஏற்ப பலவீனமடைகிறது. இப்படி நடக்கும்போது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று நோய்களுக்கு மெதுவாகவே நமது நோய் எதிர்ப்பு மண்டலம் வேலை செய்யும் எனவும் கூறியுள்ளனர். இந்தக் காரணங்களால் வயதானவர்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றனர் எனவும் தெரிய வந்திருக்கிறது.
பொதுவாக வயதாகும்போது அழற்சி போன்ற குறைபாடுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் கொரோனா பெருந்தொற்று நேரத்தில் இத்தன்மை மிகவும் ஆபத்தாக மாறியுள்ளது. வயதானவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கும்போது பல உறுப்புகள் மோசமாக பாதிக்கப் படுகின்றன. இதற்கு அடிப்படையான காரணம் அழற்சி வினைகளை எதிரொலிப்பதன் ஆரம்பக் கட்டத் தூண்டுதலாகக் கூட இருக்கலாம் எனத் தற்போது விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments