தொலைபேசியில் மிரட்டல் வருகிறது: 'மெர்சல்' விவகாரம் குறித்து தமிழிசை

  • IndiaGlitz, [Monday,October 23 2017]

தளபதி விஜய்யின் 'மெர்சல்' என்ற வெற்றி படத்தை சூப்பர் ஹிட் வெற்றி படமாக்க உதவிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வருவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

'மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி குறித்த தவறான புரிந்துணர்வை மட்டுமே தான் சுட்டிக்காட்டியதாகவும், யாரையும் எங்கள் கட்சிக்கு இழுக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் கூறினார்.

ஒரு கருத்தை சொல்வதற்கு எப்படி சுதந்திரம் இருக்கின்றதோ அதேபோல் அந்த கருத்து தவறு என்று கூறுவதற்கும் சுதந்திரம் இருக்கின்றது. மெர்சலில் உள்ள தவறை சுட்டிக்காட்டியதால் எனக்கு தொலைபேசியில் தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமின்றி இணையதளங்களில் தவறான விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இது தவறான அணுகுமுறை' என்று தமிழிசை தனது பேட்டியில் கூறியுள்ளார்.

More News

கருத்து சுதந்திரத்திலும், கலையிலும் யாரும் தலையிட கூடாது: கனிமொழி

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனத்திற்கு பாஜக தலைவர்கள் தெரியாமல் எதிர்ப்புவிட்டு கடந்த இரண்டு நாட்களாக வாங்கி கட்டிக்கொண்டு வருகிறார்கள்.

பிரேமம் இயக்குனரின் அடுத்த படத்தில் இரண்டு ஹீரோக்கள்

மலையாள இயக்குனர் அல்போன்ஸ் இயக்கிய 'பிரேமம்' திரைப்படம் கேரளா மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது. குறிப்பாக சென்னையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

'மெர்சல்' சுனாமியிலும் தப்பித்த 'மேயாத மான்'

ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது சின்ன நடிகர்கள், சின்ன பட்ஜெட் படங்கள் வெளியிடுவது பெரும்பாலும் தவிர்க்கப்படும்.

சரத்குமாரின் 'சென்னையில் ஒருநாள் 2' படத்தின் ஓப்பனிங் வசூல் விபரம்

கடந்த வாரம் தீபாவளி அன்று வெளியான திரைப்படங்களில் ஒன்று 'சென்னையில் ஓருநாள் 2'. இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வெற்றியை கொடுத்த நிலையில் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

அனிருத்தின் 'சொடக்கு' முழு பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்ற 'சொடக்கு மேல' பாடலின் டீசர் சமீபத்தில் அனிருத் பிறந்த