பிழைப்புக்காக பேருந்து ஓட்டும் முன்னாள் சிஎஸ்கே வீரர்… ரசிகர்கள் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடிய இலங்கை வீரர் ஒருவர் தற்போது ஆஸ்திரேலிய தெருக்களில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதுகுறித்த புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையின் கிரிக்கெட் அணியில் ஆப்-ஸ்பின்னராக விளையாடி வந்தவர் சுராஜ் ரன்தீப். இவர் இலங்கை அணிக்காக கடந்த 2009 முதல் 2016 வரை பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பல சர்வதேசப் போட்டிகளில் விளையாடி இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிரான போட்டியிலும் கலந்து கொண்டு விளையாடினார்.
அதோடு ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2011 முதல் 2012 வரை விளையாடி உள்ளார். தற்போது கிரிக்கெட் போட்டிகளில் பெரிய வாய்ப்பு கிடைக்கப் பெறாமல் பொருளாதாரத்திற்காக ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டும் பணியாளராக இருந்து வருகிறார். இதுகுறித்த புகைப்படம் வெளியாகி தற்போது சோஷியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சுராஜ் ரன்தீப்பை போலவே இலங்கையின் மற்றொரு வீரரான சிந்தக நமஸ்தே மற்றும் ஜிம்பாபே அணியின் முன்னணி வீரராக வலம்வந்த வெடிங்டன் வாயெங்கா ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் பேருந்து ஓட்டுநர்களாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com