close
Choose your channels

'லால் சலாம்' திரைக்கதையில் உதவி செய்வது இந்த பிரபல இயக்குனரா?

Monday, May 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் திரைக்கதையில் பிரபல இயக்குனர் ஒருவர் அவருக்கு உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் திரைப்படம் ’லால் சலாம்’. கிரிக்கெட் கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்கள் என்பதும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் உலக கோப்பை வின்னர் கபில்தேவ் நடித்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் திரைகதையை எழுதுவதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு இயக்குனர் செல்வராகவன் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே செல்வராகவனின் சில படங்களில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உதவி இயக்குனராக பணிபுரிந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு அவர் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ’Kai po che’ என்ற படத்தின் ரீமேக் தான் ’லால் சலாம்’ என்றும் அந்த படத்தில் இடம்பெறும் முஸ்லிம் கேரக்டரை தான் ரஜினிக்கு ஏற்ற மாதிரி பில்டப் கொடுத்து மொய்தீன் பாய் என்ற கேரக்டராக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் செல்வராகவன் இந்த படத்தின் திரைக்கதைக்கு உதவி இருப்பதாக வெளியாகி உள்ள செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment