தனுஷின் இந்த படம் மூன்று பாகங்களாக உருவாகிறதா?ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Friday,June 23 2023]

தமிழ் சினிமாவில் தற்போது சர்வ சாதாரணமாக இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் போது தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இரண்டு அல்லது மூன்று மாதங்களாக உருவாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. கடந்த 1940 ஆம் ஆண்டுகளில் சுதந்திர போராட்ட காலத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்த வரும் இந்த படத்தில் சந்திப் கிஷான், நிவேதிதா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் உருவாகும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகம் உருவாக்கும் எண்ணம் இருப்பதாகவும் முதல் பாகம் ரிலீஸ் ஆனவுடன் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் பட குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் பிறந்த நாளுக்காக பிக்பாஸ் நடிகை வரைந்த ஓவியம்.. நெட்டிசன்கள் ரியாக்சன் என்ன?

 தளபதி விஜய் நேற்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்.

பிப்ரவரியில் எலும்பு முறிவு.. ஜூனில் வேற லெவலில் வொர்க்-அவுட்.. அஜித் நாயகியின் தன்னம்பிக்கை..!

கடந்த பிப்ரவரி மாதம் காலில் எலும்பு முறிவுடன் சிகிச்சை பெற்று வந்த அஜித் பட நடிகை ஒருவர் நான்கே மாதங்களில் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்ததோடு தற்போது காலுக்கு கடுமையான வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை

மேனேஜர் மோசடியில் உண்மையில் நடந்தது என்ன? ராஷ்மிகா மந்தனாவின் அறிக்கை..!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மேனேஜர் ரூபாய் 80 லட்சம் மோசடி செய்து விட்டதாகவும் இதையடுத்து அவரை நீக்கிவிட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் இது குறித்து ராஷ்மிகா மந்தனா முற்றுப்புள்ளி

பெண் டிரைவரை நேரில் பாராட்டிய கனிமொழி எம்பி.. சிறிது நேரத்தில் டிரைவர் டிஸ்மிஸ்..!

 கோவையைச் சேர்ந்த பெண் டிரைவரை கனிமொழி எம்பி நேரில் பாராட்டிய நிலையில் சிறிது நேரத்தில் அந்த பெண் டிரைவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

புட்ட பொம்மா பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் விஜய்.. பூஜா ஹெக்டே பகிர்ந்த வீடியோ..!

தளபதி விஜய்யின் பிறந்தநாள் நேற்று தமிழ்நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்பதும் தமிழ் திரை உலக பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து கூறினார்கள் என்பதையும் பார்த்தோம்.