'இந்த நாள் எங்கள் குடும்பத்திற்கு சிறப்பான நாள்': ஐஸ்வர்யா ரஜினியின் அழகிய பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று ஹோலி பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் இந்த பண்டிகை நாள் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் சிறப்பான நாள் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகையை நாடு முழுவதும் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி வருவார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று இப்பண்டிகையை ரஜினிகாந்த் குடும்பத்தினர் சிறப்பாக கொண்டாடினர்.
இந்த நிலையில் இதுகுறித்து கலர்ஃபுல்லான ஒரு புகைப்படத்தை பதிவு செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியபோது, ‘ வண்ணங்கள் இல்லாமல் என்ன வாழ்க்கை? ஹோலி எங்கள் குடும்பத்திற்கு மிகவும் சிறப்பான நாள். ஏனெனில் ’சிவாஜி’ என்பவரை ’ரஜினிகாந்த்’ என இந்த நாளில் தான் எங்கள் அன்பான தாத்தா கே பாலசந்தர் மாற்றி பெயர் வைத்தார். என்றும் புன்னகையுடன் இருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout