பணப்பெட்டியை எடுத்து வெளியேறியது இந்த போட்டியாளரா? எத்தனை லட்சம் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,January 03 2024]

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஒரு போட்டியாளர்கள் வெளியேறிவிட்டதாக தகவல் கசிந்து உள்ளது.

ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் கடைசி நேரத்தில் பணப்பேட்டி டாஸ்க் வைக்கப்படும் என்பதும் ஒரு போட்டியாளர் பணத்தை எடுத்துக்கொண்டு போட்டியிலிருந்து விலகிவிடுவார் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் நேற்று பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக பணப்பெட்டியின் மதிப்பு உயர்த்தப்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் திடீரென மதிப்பு குறைக்கப்பட்டதாகவும் பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பணப்பெட்டியின் மதிப்பு 13 லட்சம் வந்தபோது அந்த பெட்டியை எடுத்துக்கொண்டு போட்டியாளர் விசித்ரா வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று பணப்பெட்டி அறிமுகம் செய்த போது ’யாராவது பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு போங்க, கடன் இருக்கிறவங்க பணப்பெட்டியை எடுத்துக்கோங்க’ என்று விசித்ரா கூறியிருந்த நிலையில் இன்று அவரே அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு சென்றிருப்பது பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.