பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வார எவிக்சன் இவரா? நம்பவே முடியவில்லையே..!

  • IndiaGlitz, [Friday,December 29 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாமினேஷன் படலத்தில் சிக்கிய போட்டியாளர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷனில் தினேஷ், மணி, விஷ்ணு, விஜய் வர்மா, ரவீனா, நிக்சன் மற்றும் மாயா ஆகிய ஏழு பேர்கள் நாமினேஷனில் உள்ளனர். இவர்களில் தினேஷ் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். மணி மற்றும் விஷ்ணு இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

இந்த வாரம் குறைந்த வாக்கு சதவீதம் பெற்று உள்ளவர் மாயா என்பது தெரியவந்துள்ளது. அவர் பதிவான வாக்குகளில் வெறும் 8% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார் என்பதால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. மாயாவுக்கு கமல்ஹாசனும், பிக்பாஸும் ஆதரவு கொடுத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் அவர் வெளியேறுவார் என்பதை நம்ப முடியவில்லை என பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் மாயாவுக்கும் நிக்ஸனுக்கும் இடையே குறைந்த வாக்குகள் வித்தியாசம் இருப்பதால் இன்று மற்றும் நாளைக்குள் நிலைமை மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.