பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த நடிகரா? ஹாட்ஸ்டார் அறிவிப்பு!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவு பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக ராஜு தேர்வு செய்யப்பட்டார் என்பதும் இரண்டாவது இடத்தை பிரியங்கா பெற்றார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் ரசிகர்களுக்காக பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி விரைவில் தொடங்கப் போவதாகவும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு, இதற்கான புரோமோ வீடியோ வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக வனிதா, பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, அனிதா சம்பத் மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன

இந்த நிலையில் தற்போது ஹாட்ஸ்டார் தனது ட்விட்டர் பக்கத்தில் மற்றொரு போட்டியாளர் குறித்த மறைமுக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான காமெடி நடிகர் கஞ்சா கருப்பு அந்த நிகழ்ச்சியில் கன்பெஃக்சன் ரூமுக்கு சென்றபோது ’நாமினேஷன் என்றால் என்ன? என்று கேட்டார். இந்த வசனத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஹாட்ஸ்டார், கஞ்சா கருப்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை மறைமுகமாக உறுதி செய்துள்ளது.

More News

சாக்கு மூட்டையில் பிணமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை… கணவரே கொலை செய்தாரா?

பங்களாதேஷ் நாட்டில் பிரபல சினிமா நடிகையாகவும் தொலைக்காட்சி

தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்: தனுஷ்-ஐஸ்வர்யா குறித்து எஸ்.ஏ.சி. கருத்து!

ஒரு பொருளை தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும் என்றும், திநகரில் பர்ஸை தொலைத்துவிட்டு திருவல்லிக்கேணி தேடினால் எப்படி கிடைக்கும்? என்றும் தனுஷ் - ஐஸ்வர்யா குறித்து

அண்ணனுக்கு இன்னொரு பெயர் அப்பா: ராஜூவுக்கு நெகிழ்ச்சியான வரவேற்பு கொடுத்த அண்ணாச்சி!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு தனது வீட்டிற்கு வந்தபோது நெகிழ்ச்சியான வரவேற்பு கொடுத்த வீடியோவை இமான் அண்ணாச்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

மீண்டும் தேர்தல் களத்தில் நிர்வாகிகள்: க்ரீன் சிக்னல் கொடுத்த விஜய்?

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது விரைவில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும்

வீட்டில் திருடிய 19 வயது இளைஞனை துரத்திய தமிழ் நடிகை!

தனது வீட்டில் திருடிய 19 வயது இளைஞனை தமிழ் நடிகை ஒருவர் துரத்தியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.