ஐசியூவில் இருந்து நார்மல் வார்டுக்கு கொண்டு வந்துள்ளோம்: பட்ஜெட் குறித்து தமிழிசை
- IndiaGlitz, [Thursday,February 01 2018]
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று 2018-2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகளும், வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று ஆளும் பாஜகவினர்களும் கூறி வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் தரப்பில் இருந்து வரும் பெரும்பாலான கருத்துக்கள் இந்த பட்ஜெட் ஏமாற்றம் தரும் பட்ஜெட் என்றே உள்ளது. இந்த நிலையில் இந்த பட்ஜெட் குறித்து பிரபலங்களின் கருத்துக்களை பார்ப்போம்
பிரதமர் மோடி: புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட் வழி செய்யும். விவசாயிகளின் மூலதனம் 2 மடங்கு வருமானமாக அவர்களுக்கே வந்து சேரும்
ராகுல்காந்தி: பொதுமக்களுக்கும் ஏழைகளுக்கும் எதிரான பட்ஜெட்
தமிழிசை செளந்திரராஜன்: இந்த பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருக்கும் நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம்.விரைவில் அதை நடக்க வைப்போம்
ப.சிதம்பரம்: மத்திய பட்ஜெட் மூலம் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது:
FICCI தலைவர்: எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இது சராசரி பட்ஜெட்