இந்த முறை பிக்பாஸ் ஈழத்தமிழர்களுக்காகவா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் 1 நிகழ்ச்சி மக்களை கவர்ந்த அளவுக்கு பிக்பாஸ் 2 மக்களை திருப்திபடுத்தவில்லை என்று கூறப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் பாசிட்டிவ் எனர்ஜியை தந்த ஓவியா, அவருக்கு நெருக்கடி கொடுத்த ஜூலி, காயத்ரி ரகுராம், சக்தி ஆகியோர்கள் ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தினார். இன்னொரு பக்கம் சினேகன் - சுஜா மோத, ஓவியா-ஆரவ் காதல், என நிகழ்ச்சி கடைசி வரை சுவாரஸ்யமாக சென்றது.
ஆனால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி முதல் பாகம் அளவுக்கு சுவாரஸ்யம் இல்லை என்றாலும் செண்ட்ராயன், ஜனனி, ரித்விகா ஆகியோர் மக்கள் மனதை கவர்ந்தனர். யாஷிகா, ஐஸ்வர்யா இருவரும் பிக்பாஸ் ஆதரவுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர். ஒருபக்கம் தாடிபாலாஜி அவருடைய மனைவி நித்யா பிரச்சனையும், இன்னொரு பக்கம் மகத்-யாஷிகா காதலும் சேர்ந்ததால் கடைசி சில நாட்கள் மட்டும் நிகழ்ச்சி பரபரப்புடன் சென்றது.
ஆனால் இந்த முறை ஆரம்பத்தில் இருந்தே நிகழ்ச்சி பரபரப்புடன் செல்ல வேண்டும் என்பதை யோசித்து நிகழ்ச்சி தயாரிப்பு குழுவினர் செயல்பட்டிருப்பது போல் தெரிகிறது. இந்த முறை இரண்டு ஈழத்தமிழர்கள் போட்டியாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பதும் இதன் ஒரு பகுதியாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் ஈழத்தமிழர்கள் இருப்பதால் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர்களுடைய ஆதரவை பெறுவது மட்டுமின்றி இந்த இருவர் மூலம் ஈழத்தில் நடந்த கொடுமைகளை கூறுவதன் மூலம் அனுதாபத்தையும் பெற வைப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் நோக்கமக இருக்கலாம் என கருதப்படுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் இந்த முறை இருவரில் ஒரு ஈழத்தமிழர் பிக்பாஸ் பட்டத்தை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே எண்ண தோன்றுகிறது. அதற்கு அறிகுறியாக நேற்றைய முதல் நாளே ஈழத்தமிழ்ப்பெண் லொஸ்லியாவுக்கு ஆர்மி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout