நியூசிலாந்து சாம்பியன் என பல மாதங்களுக்கு முன்னரே கணித்த ஜோதிடர்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய அரையிறுதியில் இந்தியா தான் வெற்றி பெறும் என பல கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்திருந்தாலும், நியூசிலாந்து அணி வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியது.
இந்த நிலையில் பல மாதங்களுக்கு முன்னரே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிடர் ஒருவர் உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவும் நியூசிலாந்தும், அல்லது இந்தியாவும் இங்கிலாந்தும் மோத வாய்ப்பு உள்ளதாகவும், இதில் நியூசிலாந்து வெற்றி பெறும் என்றும் கூறினார். மேலும் இந்த ஆண்டு உலகக்கோப்பையை நியூசிலாந்து தான் வெல்லும் என்றும் கே.எம்.வில்லியம்ஸ் தொடர் நாயகன் விருதினை பெறுவார் என்றும் கூறியுள்ளார். இவர் கூறியதுபோலவே இந்தியாவை நியூசிலாந்து தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த மக்களவை தேர்தலில் பாஜக மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார் என்று அதே நிகழ்ச்சியில் இதே ஜோதிடர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
SHOCKING : This guy predicted #CWC19 scenario long back! #TeamIndia #INDvsNZ #NewZealand pic.twitter.com/DHUwpmZFbs
— Tamilnadu Theatres Association (@TN_Theatres) July 11, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments