கொரோனாவை வெறும் 24 மணிநேரத்தில் குணப்படுத்த முடியுமா??? அசத்தும் விஞ்ஞானிகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவல் கடந்த டிசம்பர் மாத இறுதியில் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டது. கடந்த 11 மாதத்தில் அதன் பாதிப்பு எண்ணிக்கை உலகம் முழுவதும் 6 கோடியைத் தாண்டி அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்பும் 15 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. இந்நிலையில் வைரஸ் பரவலைத் தடுக்கும் தடுப்பூசி கண்டுபிடிப்புக்கான ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன.
ஸ்புட்னிக், ஸ்பைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் பல்கலைகக் கழகத் தடுப்பூசி ஆகியவை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருந்தாலும் கொரோனா தடுப்பூசிகள் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வில்லை. இந்நிலையில் உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பை 24 மணி நேரத்தில் குணப்படுத்தும் வாய்வழி மருந்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
முன்னதாக கொரோனா பரவலைத் தடுக்கும் களிம்பு, மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா நாசி மருந்து போன்றவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருந்தனர். இந்நிலையில் உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸை தாக்கி அழிக்கும் வாய்வழி மருந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதற்கு MK-44821-EIDD-22801 எனப் பெயரிடப்பட்டு உள்ளது.
மேலும் இந்த மருந்து வெறுமனே 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பை குணப்படுத்தும் என்றும் சோதனையில் இது உறுதிச் செய்யப்பட்டு உள்ளதாகவும் அதன் விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர். இதையடுத்துத் தடுப்பூசி கண்டுபிடிப்பில் இந்த மருந்தின் கண்டுபிடிப்பு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முழுதான அறிக்கையை நேச்சர் மைக்ரோபயாலஜி எனும் அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டு உளளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout