புகைப்படங்களை புராண சித்திரங்களாக மாற்றும் இளைஞர்!
- IndiaGlitz, [Wednesday,August 19 2020]
ஒவ்வொரு கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்றும் தங்களுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டு பார்த்து மகிழும் பெற்றோர்கள் பலர் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கிருஷ்ணர் மட்டுமின்றி பல புராண தெய்வங்களின் வேடங்களை தங்களுடைய குழந்தைகளுக்கு போட்டு மகிழும் பெற்றோர்கள் பலர் உண்டு.
இந்த நிலையில் சமூக வளைதளத்தில் புகைப்படங்களை புராண சித்திரங்களாக மாற்றும் இளைஞர் ஒருவர் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. பெங்களூரை சேர்ந்த கரன் ஆச்சாரியா என்ற ஓவியர் சமூக வலைதளங்களில் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவு செய்தால் அவர்களுடைய விருப்பத்தின்படி அந்த குழந்தைகளின் புகைப்படங்களை புராண சித்திரங்களாக மாற்றி தருகிறார். குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர்களையும் தெய்வங்களாக மாற்றி தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய கைவண்ணத்தில் பலருடைய புகைப்படங்கள் ராமர், கிருஷ்ணர் உள்பட தெய்வங்களின் புகைப்படக் ஆக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் மட்டுமின்றி ஒரு சில பெரியவர்களுக்கும் கூட அவர்களுடைய புகைப்படத்துக்கு ஏற்ற புராணசித்திரங்களாக மாற்றி கொடுத்துள்ளார். இந்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Done sir.. ?? pic.twitter.com/jccptAVmhC
— karan acharya (@karanacharya7) August 18, 2020