தனது கால்களை வைத்தே கின்னஸ் சாதனை புத்தகத்தில் தடம் பிடித்த சிறுமி… சுவாரசியத் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக பலர் உயிரை விட்டு சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இங்கு ஒரு சிறுமி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தனது கால்களை வைத்தே கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்ல் உள்ள செடார் பார்க் எனும் பகுதியில் வசித்து வரும் மேசி கர்ரீன் (17) எனும் சிறுமிக்கு கால்கள் கொஞ்சம் நீளம். நீளம் என்றால் ஒரு சராசரி மனிதனின் நீளம் அவ்வளவுதான். அவருடைய கால்கள் இரண்டும் 4 அடி நீளம் கொண்டு இருக்கின்றன. இதனால் உலகிலேயே மிக நீளமான கால்களைக் கொண்டவராக மேசி கர்ரீன் அறியப்படுகிறார். இவருடைய மொத்த உயரம் 6 அடி மற்றும் 10 அங்குலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சிறப்புக்காகத்தான் இவர் தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து இருக்கிறார்.
முன்னதாக உலகிலேயே மிக நீளமான கால்களைக் கொண்டவராக இருந்து வந்த ரஷ்யாவின் எகாடெரீனா லிசினா என்பவரை பின்னுக்குத் தள்ளி மேசி கர்ரீன் தற்போது உலகச் சாதனை படைத்து இருக்கிறார். அதுவும் அவருடைய மொத்த உயரத்தில் 60% கால்களே இடம் பிடித்துள்ளன. மேலும் அவரது வலது கால் 134.3 செ.மீட்டரும் இடது கால் 135.267 செ.மீட்டரும் இருப்பாதாக கின்னஸ் புத்தகம் கூறியுள்ளது.
இதுபற்றி மேசி கர்ரீன் கூறும்போது, மற்றவர்கள் எப்போதும் உயரமாக இருக்கிறாய் எனக் கிண்டல் செய்வார்கள். ஆனால் யாரும் என்னுடைய கால்கள் நீளமாக இருக்கிறது எனச் சொல்லியதே இல்லை. நான் லெக்கின் வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்தேன். அப்போது என்னுடைய கால்களுக்கு ஏற்றவாறு எங்கேயும் ஆடைகள் கிடைக்கவே இல்லை. அதற்குப் பின்னர், உலகச் சாதனை புத்தகத்துக்கு விண்ணப்பித்தாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments