விளையாட வேண்டிய வயதில்… கோடிக்கணக்கில் சம்பாதித்து ஓய்வுபெற்ற சிறுமி!!
Send us your feedback to audioarticles@vaarta.com
என்னதான் வளர்ந்துவிட்ட தொழில்நுட்பக் காலக்கட்டமாக இருந்தாலும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பது என்பதையெல்லாம் நம்மால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் சமீபத்தில் தொழில் நிறுவனத்தைத் துவங்கி அதில் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டு பின்னர் 12 வயது சிறுமி ஓய்வு பெற்றிருக்கும் தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்துவரும் 11 வயது சிறுமி பிக்ஸி கர்டிஸ். விளையாட்டு பொம்மைகள் மீது அலாதியான பிரியம் கொண்ட இந்தச் சிறுமி கொரோனா காலக்கட்டத்தில் தனக்குப் பிடித்த விளையாட்டு பொம்மைகளை டிசைன் செய்ய ஆரம்பித்து இருக்கிறார். இவருக்குள் இருக்கும் ஆர்வத்தை புரிந்து கொண்ட அவருடைய அம்மா ராக்ஸி ஜசென்கோவ் பிக்ஸிஸ் ஃபிட்ஜெட்ஸ் என்ற பெயரில் விளையாட்டு பொம்மைகளைத் தயாரிக்கும் நிறுவனத்தையே துவங்கிவிட்டார்.
இதையடுத்து தனதுசொந்த நிறுவனத்திலேயே தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிவந்த பிக்ஸி கர்டிஸ் மாதம் ஒன்றிற்கு 133,000 டாலர் சம்பாதித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.10,941,437. கிட்டத்தட்ட மாதத்திற்கு 11 கோடியை வருமானமாக பெற்றுவரும் பிக்ஸி தற்போது தனது படிப்புக்காக தொழில் நிர்வாகத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து தன்னடைய 12 ஆவது பிறந்த நாளின்போது தனது ஓய்வை விழாவையும் சேர்த்து கொண்டாடிய சிறுமி பிக்ஸி விழாவிற்கு வந்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் 50 டாலர் இந்திய மதிப்பில் 4112 ரூபாய் மதிப்புள்ள தோல் பராமரிப்பு பொருட்களைக் கொடுத்துள்ளார்.
2021 இல் தொழில் நிறுவனத்தைத் துவங்கி கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டு தற்போது படிப்புக்காக தனது ஓய்வை அறிவித்து இருக்கும் பிக்ஸி தற்போது சிங்கப்பூரிலுள்ள பன்னாட்டு கல்வி நிறுவனத்தில் படிப்பை துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிக்ஸியுடன் அவருடைய 9 வயது தம்பி ஆலிவர் கர்டிஸும் இணைந்துள்ள நிலையில் தொழில் நிறுவனர் என்ற அடையாளத்தை விட்டுவிட்டு பிக்ஸி இனிமேல் படிப்பில் கவனம் செலுத்தவுள்ளார்.
வளர்ந்து விட்ட தொழில் நுட்பக் காலக்கட்டத்தில் சிறுவர்கள் அதிக ஆர்வத்துடன் புதிய புதிய தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்டு வருகின்றனர். இதையே சிலர் முதலீடுகளாக மாற்றி சம்பாதித்து வருவதையும் பார்த்து வருகிறோம். இந்நிலையில் 12 வயதில் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டு அதிலிருந்து ஓய்வை அறிவித்து இருக்கும் பிக்ஸி குறித்த தகவல்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout