மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி நடுரோட்டில் மரணம்: என்ன நடந்தது?
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் ஒரு சிலர் மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் இருந்து தப்பித்து செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றனர் அந்த வகையில் திருவண்ணாமலை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற ஒருவர் திடீரென தப்பித்துச் சென்றதை அடுத்து அவர் நடுரோட்டில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேரியந்தல் என்ற பகுதியை சேர்ந்த 40 வயது ஆண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி திடீரென அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென கொரோனா வார்டில் இருந்து மாயமானார்.
இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அவரை மருத்துவமனை முழுவதும் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் அவரை தேடிவந்த நிலையில் திருவண்ணாமலை பைபாஸ் சாலை ஓரம் ஒரு நபர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. விரைந்து சென்று காவல்துறையினர் பார்த்தபோது கொரோனா வார்டில் இருந்து தப்பிச் சென்றவர் தான் சாலையில் இறந்தவர் என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து அந்த வாலிபரின் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா வார்டில் இருந்து தப்பிச் சென்ற நபர், மூன்று கிலோமீட்டர் தூரம் தனது வீட்டிற்கு நடந்து சென்றதாகவும் அப்போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்து விட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் வார்டில் இருந்து தப்பிச் சென்ற வாலிபர் ஒருவர் மூச்சுத்திணறி நடுரோட்டில் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments