திருவான்மியூர் டிக்கெட் கவுண்டர் கொள்ளை சம்பவம்… திடீர் திருப்பத்தால் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நேற்று ஊழியர் ஒருவரை துப்பாக்கிமுனையில் மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்த 1.3 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துவிட்டு சென்றதாக தகவல் வெளியானது. இந்த வழக்கில் அந்த ஊழியரே மனைவியுடன் சேர்ந்து நாடகமாடி பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் பணியாற்றிவந்த டீக்காராம் மீனா (28) தன்னை, 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு சென்றதாக நேற்று புகார் அளித்திருந்தார். இதையடுத்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் திருவான்மியூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாத நிலையில் அருகேயிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வுசெய்த நிலையில் ஒரு பெண் அந்த இடத்திற்கு வந்துவிட்டு திரும்பிச் செல்வதை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் டீக்காராம் அதிகாலை 4.30 மணிக்கு தனது மனைவியிடம் வாட்ஸ் அப் காலில் பேசியதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் முந்தின நாள் இரவு முதல் அவருடைய செல்போன் சிக்னல் இல்லாமல் இருப்பதைக் கண்டுபிடித்த போலீசார் டீக்காராம் மற்றும் அவருடைய மனைவி சரஸ்வதியிடம் விசாரித்துள்ளனர்.
இயைதடுத்து சூதாட்டம் போன்ற விஷயங்களால் கடன் தொல்லையில் இருந்துவந்த டீக்காராம் தனது மனைவியுடன் சேர்ந்து பணத்தைக் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் சிசிடிவி கேமராக்கள் இல்லாததை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்ததையும் தெரிவித்துள்ளார். இதனால் டீக்காராம் மற்றும் அவரது மனைவி சரவஸ்வதி இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தச் சம்பவம் சென்னை பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments